வியாழன், ஜனவரி 01, 2015

பான் கீ மூன் மீது அரசு கண்டனம்


இலங்கையில் அமைதியானதும், நம்பகமானதுமான ஜனாதிபதித் தேர்தலை நடத்த வலியுறுத்திய ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கடுமையாகக் கண்டித்துள்ளது.

அமைதியாகவும், நம்பகமாகவும் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்று தாம் எதிர்பார்ப்பதாக ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் தவறான அனுமானங்களைச் செய்வதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளதாக  அரசாங்கத்தின் அதிகார பூர்வ வலைத்தளத்தில் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.