புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜன., 2015

பிரதம நீதியரசரை பதவி நீக்குவதற்கு பிரதமர் ஒத்துழைக்கவில்லை


பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸை பதவியிலிருந்து நீக்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒத்துழைக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசரை பதவியிலிருந்து விலக்குவது தொடர்பிலான ஆவணத்தில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க கையொப்பமிடவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சட்டத்தரணிகள் சங்கத்தின் சிரேஸ்ட சட்டத்தரணிகள் இந்த ஆவணத்தில் ரணிலிடம் கையொப்பங்களை பெற்றுக்கொள் முயற்சித்து வருகின்றனர்.
சிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசராக பதவி வகிப்பதனை ரணில் விக்ரமசிங்க விரும்ப வில்லையோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் திட்டத்தில் சிராணி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசராக்கும் உறுதிமொழியும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும், இதனை அமுல்படுத்த பிரதமர் ரணில் தயக்கம் காட்டி வருவதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ad

ad