புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜன., 2015

ஜெயலலிதா சிறையில் இருந்த போது, அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் எப்படி சோதனை நடத்தலாம்?

 சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சிறையில் இருந்த போது, அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்
துறையினர் எப்படி சோதனை நடத்தலாம்? என்று அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிடம் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று 10 ஆம் நாளாக நடைபெற்றது.

இதில், ஜெயலலிதா தரப்பில் ஆஜராகி வாதிட்ட வழக்கறிஞர் நாகேஸ்வரராவ், "ஜெயலலிதா சொத்துக்  குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்தனர்.

குற்றம்சாட்டப்பட்ட ஒருவர், வீட்டில் இல்லாத போது, அவரின்  வீட்டில் எப்படி சோதனை நடத்த முடியும்? சம்பந்தப்பட்டவர் வீட்டில் இருக்கும் போதுதான் சோதனை நடத்த வேண்டும்" என்று கூறினார்.

இதனை குறித்துக் கொண்ட நீதிபதி குமாரசாமி, சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் இல்லாத போது, எவ்வாறு சோதனை நடத்தப்பட்டது? குற்றம்சாட்டப்பட்டவரை வைத்துக் கொண்டுதான் வீட்டில் சோதனை நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு தீர்ப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளதே என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங், "லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனை குறித்து ஜெயலலிதாவுக்கு தெரிவிக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் ஒப்புதலைப் பெற்ற பிறகே, அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. சோதனை நடத்தியபோது, ஜெயலலிதா தரப்பில் பாஸ்கர் என்பவர் வீட்டில் இருந்தார்" என்று விளக்கம் அளித்தார்.

ad

ad