புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2015

சூடுபிடிக்கும் ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்

திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீரங்கம் தொகுதி தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக வேட்பாளர் ஆனந்த்,
தனது தேர்தல் பிரசாரத்தை இன்றே தொடங்கிவிட்டார்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் கடந்த முறை ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த ஆனந்தை மீண்டும் களம் இறக்கியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. அ.தி.மு.க., பா.ஜ.க ஆகிய கட்சிகள் வேட்பாளர் நிறுத்துவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன. இதனால் ஸ்ரீரங்கம் தொகுதியில் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஆனந்த், நேற்று தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார். அடுத்து சென்னையிலிருந்து திரும்பிய அவர், இன்று காலை திருச்சி மாவட்ட செயலாளர்களான  கே.என்.நேரு, காடுவெட்டி தியாகராஜன், திருச்சி மாநகர செயலாளர் அன்பழகன் சகிதமாக திருச்சி சந்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள  அண்ணா,  மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் உள்ளிட்ட  தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து தனது தேர்தல் பணியை தொடங்கினார்.

அப்போது, பேசிய வேட்பாளர் ஆனந்த், கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில்  விலைவாசி உயர்வு, பால், மின் கட்டணம், பேருந்து கட்டணம் உயர்வு  உள்ளிட்டவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதற்கு மக்கள் பதில் கொடுக்கும் விதமாக ஸ்ரீரங்கம் தொகுதியில் தி.மு.க.விற்கு வாக்களித்து பெரிய அளவில் வெற்றியை தருவார்கள். தலைவர் கலைஞர், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆசியுடன் மாவட்ட செயலாளர் கே.என்.நேரு அறிவுரையுடன் தேர்தல் பணியாற்றி வெற்றியை சமர்ப்பிப்போம்" என்றார்.

ad

ad