புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2015

எப்போது மாறுவார் மகிந்த?

  பொது நூலகத்தில் அமைந்துள்ள யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான கேட்போர் கூடத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உருவப்படம் இன்னமும்
அகற்றப்படாது தொங்கவிடப்பட்டுள்ளது.
 
 
ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்று ஜனாதிபதியாக கடந்த 9ஆம் திகதி பதவியேற்றார்.
 
 
எனினும் மாநகர சபைக்கு சொந்தமான குறித்த கேட்போர் கூடம் வடக்கு மாகாண சபை உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதற்கு முன்னர் வடமாகாண முன்னாள் ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் மேற்பார்வையின் கீழ் பேரவைச் செயலகமாக இயங்கி வந்தது.
 
தற்போது வடக்கு மாகாண சபையின் கட்டிடத் தொகுதி கைதடியில் அமைக்கப்பட்ட பின்னர் குறித்த இடம் வடக்கு மாகாண சபையின் கேட்போர் கூடமாக இயங்கி வருகின்றது.
 
 
எனினும் குறித்த கேட்போர் கூடத்தின் பராமரிப்பு அனைத்தையும் யாழ் .மாநகர சபையே மேற்கொண்டு வருகின்றது.
 
எனவே மகிந்த ராஜபக்சவின் உருவப்படம் மாறாமல் இருப்பதற்கு யாழ்.மாநகர சபையே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad