புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜன., 2015

நிதி மோசடிகளுக்கு பதில் கூறாமல் அஜித் நிவாட் கப்ரால் பதவி விலக முடியாது: ஐ.தே.கட்சி


 

முன்னைய ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடிகளுக்கு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் பதில்கூற வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அஜித் நிவாட் கப்ரால் தமது பதவியை ராஜினாமா செய்த நிலையிலேயே சில்வாவின் குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.

கடந்த நான்கு வருடங்களாக கப்ரால் மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வந்தன.
இவற்றில், பங்கு பரிமாற்ற நிறுவனத்தின் செயற்கை நிதி மாற்றல் நடவடிக்கை, ஊழியர் சேமலாப நிதி மோசடிகள் போன்றவை அடங்கும் என்று ஹர்சா டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூறாமல் கப்ரால் பதவிவிலக முடியாது என்று சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

ad

ad