புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2015

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் நியூசிலாந்து வசம்

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 193 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது.

நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது.
இதன் முதலாவது போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றிருந்த நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி வெலிங்டனில் இடம்பெற்றது.
இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவுசெய்தது.
அதன்படி துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 221 ஓட்டங்களையும் பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 356 ஓட்டங்களையும் பெற்றன.
நியூசிலாந்து அணி 2 ஆவது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 524 ஓட்டங்களை குவித்தது. இதனால் இலங்கை அணிக்கு 390 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய 4 ஆவது நாள் ஆட்டத்தின் முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 45 ஓட்டங்களை எடுத்திருந்தது.
இன்றைய 5 ஆவதும் இறுதி நாளுமான  கடைசிநாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 72.4 ஓவரில் 196 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இதனால் நியூசிலாந்து அணி 193 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.
திரிமன்னே ஆட்டமிழக்காது அதிகபட்சமாக 62 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். நியூசிலாந்து அணி சார்பாக கிரேக் 4 விக்கெட்டுகளையும் போல்ட், பிரேஸ்வெல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றி மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் டெஸ்டில் அந்த அணி 8 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரு அணிகள் மோதும் முதலாவது  ஒருநாள் போட்டி எதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

ad

ad