புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜன., 2015

கிழக்கில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் முஸ்லிம் முதலமைச்சரே நியமிக்கப்பட வேண்டும் முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை


கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற் றம் ஏற்பட்டாலும் முதலமைச்சராக தொடர் ந்தும் முஸ்லிம் சமூகத்தவர் ஒருவரே இருக்க வேண்டும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங் கிரஸ் தரப்பினர் கோரியுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விட யத்தில் விட்டுக் கொடுப்புடன் நடந்து கொள்ள முன்வர வேண்டும் என்று அக்கட்சியின் கிழ க்கு மாகாண சபை குழுத் தலைவரான ஏ. எம்.ஜெமீல் கூறுகின்றார்.

வடக்கு மாகாண சபையில் முதலமைச்ச ராக தமிழர் ஒருவர் பதவி வகிப்பது போல் கிழக்கு மாகாணசபையில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக பதவி வகிக்க வேண்டும் என்ற முஸ்லிம்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக தங்களால் நடந்துகொள்ள முடியாது என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

கிழக்கு மாகாணசபையின் பிரதான எதி ர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப் புக்கும் (11 உறுப்பினர்கள்) ஸ்ரீ லங்கா முஸ் லிம் காங்கிரஸ் (8 உறுப்பினர்கள்) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் (4 உறுப்பினர் கள்) இடையில் ஆட்சி மாற்றம் தொடர்பான பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன.

கூடுதலான உறுப்பினர்களை கொண்டு ள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே முதல மைச்சர் பதவியை வழங்க வேண்டும் என் பதே ஜனநாயக மரபு என தமிழர் தரப்பு கருதுகின்றது.

இது ஜனநாய மரபாக இருந்தாலும், இந்த விடயத்தில் உறுப்பினர்களின் எண்ணிக் கையை கொண்டு தீர்மானம் எடுக்க முடியாது என்று ஏ. எம். ஜெமீல் கூறுகின்றார்.

தற்போதைய முதலமைச்சர் நஜீப் ஏ மஜித் உள்ளிட்ட மாகாண சபையில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளைச் சேர்ந்த முஸ் லிம் உறுப்பினர்களின் ஆதரவு தங்களுக்கு கிடைத்துள்ளதால் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பை விட கூடுதல் உறுப்பினர்களின் ஆதரவை தங்களால் உறுதிப்படுத்தக் கூடிய தாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகி ன்றார்.

ஏற்கெனவே தமிழ் தேசிய கூட்டமைப்புக் கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில் ஆட்சி மாற்றம் தொடர்பான பேச்சுக்கள் நடைபெற்றுள்ளன.தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின் றன.

இந்த பேச்சுவார்தைகளின் முடிவில் நல்ல முடிவொன்று கிடைக்கும் என்றும் கிழ க்கு மாகாண சபை உறுப்பினர் ஏ. எம். ஜெமீல் வெளியிட்டார்.

2012-ம் ஆண்டு தேர்தல் முடிவுகளின் படி, கிழக்கு மாகாணசபையின் 37 உறுப் பினர்களில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் 15 பேர் தெரிவாகியிருந்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கியி ருந்த அந்தக் கூட்டணி, முஸ்லிம் காங்கிர ஸின் ஆதரவைப் பெற்று 22 உறுப்பினர்க ளுடன் ஆட்சியை அமைத்துக் கொண்டது.

தற்போதைய நிலையில் முஸ்லிம் காங் கிரஸ் (8 உறுப்பினர்கள்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (இருவர்) உட்பட 11 பேர் ஆதரவை விலக்கிக் கொண்டிருக்கின்ற நிலையில் கிழக்கு மாகாண சபையில் இந்த ஆட்சி மாற்றம் ஏற்படவுள்ளது.

ad

ad