புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜன., 2015

மூடப்பட போகும்மகிந்தாவின் மிஹின் லங்கா நிறுவனம்


முன்னாள் ஜனாதிபதியின் புகழை உயர்த்தும் நோக்கில், பொதுமக்களின் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்து நஷ்டத்தில் நடத்தி வந்த மிஹின் விமான சேவை நிறுவனத்தை மூடிவிட்டு, அதனை ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்துடன் இணைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
கோப் குழு அறிக்கையின் பரிந்துரைகளை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
மிஹின் லங்கா நிறுவனம் 2013 ஆம் ஆண்டு 3.3 பில்லியன் ரூபா இழப்பை சந்தித்துள்ளதாக கோப் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை தவிர கடந்த ஆண்டு ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் இழப்பும் அதிகரித்துள்ளது.
கோப் குழுவின் தலைவரான டியூ. குணசேகரவும் மிஹின் லங்காவை ஸ்ரீலங்கன் விமான சேவையுடன் இணைக்குமாறு பரிந்துரை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே மிஹின் லங்கா நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் நேற்று இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடி விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடும் செய்யப்பட்டது.

ad

ad