புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜன., 2015

மகிந்தவின் ஆட்சியிலே தமிழர்கள் அதிகளவில் கொல்லப்பட்டனர்! புகழ்ந்து பேசிய ஈபிடிபி

மஹிந்த தலைமையிலான ஆட்சியில் தமிழர்களை கொன்று குவித்தோம். உண்மைதான் என்பதை இன்றைய தினம் யாழ்.மாவட்டத்தில் நடைபெற்ற ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அரசாங்கத்தின் ஆதரவுக் கட்சிகளின் உறுப்பினர்கள் தங்கள் உரைகளில் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
இன்றைய தினம் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் ஜனாதிபதி மஹிந்தவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றிருந்தது.
இந்நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் மு.சந்திரகுமார்,
இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஒரு கட்டத்தில் மைத்திரிபால சிறிசேனவே பாதுகாப்பு அமைச்சர் பதவியை வகித்திருந்தார்.
அதேபோன்று சந்திரிக்கா யுத்த வெற்றின் 70வீதம் தன்னை சாரும் என கூறுகின்றார். இவர்களுக்கு மேலதிகமாக சரத் பொன்சேகா, பாதுகாப்பாக யுத்தத்தை தாம் நடத்தியதாக கூறுகின்றார்.
அப்படியானால் மைத்திரிபால சிறிசேனாவும், சந்திரிக்காவும் யுத்தத்தில் தமிழ் மக்கள் உயிரிழப்புக்களுக்கு, பொறுப்பேற்பார்களா?
சரத் பொன்சேகா உயிரிழப்புக்களுக்கு பொறுப்பேற்பாரா? என கேள்வி எழுப்பி பேசினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் டக்ளஸ்,
அதே விடயத்தை கூறி அவர்கள் மக்கள் உயிரிழப்புக்களுக்கு பொறுப்பேற்பார்களா? என கேள்வி எழுப்பி பேசினார்.
ஆக மொத்தத்தில் மக்கள் போரில் அதிகளவில், கொல்லப்பட்டார்கள் என்பதை அந்தக் கொலைகளை இந்த மஹிந்த தலைமையிலான ஆட்சியாளர்கள் மற்றும் படையினர் செய்தார்கள் என்பதனை இன்று அந்த ஆட்சியில் அங்கத்துவம் பெற்றிருப்பவர்களே வாய்விட்டுக் கூறியிருக்கின்றார்கள்.
இவர்கள் இவ்வாறு கேள்வி எழுப்பி பேசிக் கொண்டிருக்கையில் மஹிந்த, மேடையில் அமைதியாக அமர்ந்திருந்து அவர்கள் ஏதோ வீராவேசமாக பேசுவதாக நினைத்தபடி இருந்தார். 

ad

ad