புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜன., 2015

வடக்கு ஆளுநருக்கான நிதி பேரவைச் செயலகத்திற்கு மாற்றம்


2015 ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநருக்கு என ஒதுக்கப்பட்ட 6 மில்லியன் ரூபா பேரவைச் செயகத்திற்கே மாற்றுவதாக தீர்மானம்
எடுக்கப்பட்டுள்ளது.
 
வடக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று நடைபெற்றது. அதன்போதே உறுப்பினர்களிடத்தில் இடம்பெற்ற வாதப்பிரதிவாதங்களின் பின்னர் இந்த தீர்மானம் இறுதி முடிவாக அவைத்தலைவரால் தெரிவிக்கப்பட்டது.
 
வடக்கு மாகாண ஆளுநராவிருந்த ஜீ.ஏ சந்திரசிறி மாற்றப்பட்டு புதிய ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஆளுநருக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் விவாதிக்கப்பட்டது. 
 
அந்தவகையில் வடக்கு ஆளுநருக்கு ஒதுக்கப்பட்டிருந்த 8 மில்லியன் ரூபாவில் 2மில்லியன் ஆளுநர் செயலகத்திற்கும் ஆளுநருக்கு என 6 மில்லியன் ரூபாவினையும் ஒதுக்குவது என ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்தது. 
 
எனினும் குறித்த ஒதுக்கீடு தொடர்பில் இன்று சபைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்போது உறுப்பினர்கள் ஆளுநருக்கு நிதி ஒதுக்கீடு அவசியம் அற்றது. செயலகத்திற்கான ஒதுக்கீடே போதும் என வாதிட்டனர்.
 
அத்துடன் பேரவைச் செயலகத்தின் ஊடாக செய்ய வேண்டிய வேலைகளுக்கு பணம் போதாது உள்ளது என்றும் குறித்த 6 மில்லியன் ரூபாவையும் பேரவைச் செயலகத்திற்கு வழங்குமாறு உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர்.
 
நீண்ட வாதப்பிரதிவாதங்களுக்கு பின்னர் ஆளுநருக்கு ஒதுக்கப்படவிருந்த 6மில்லியன் ரூபாவும் பேரவைச் செயலகத்திற்கு ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டது.
 
அத்துடன் புதிய ஆளுநருடன் கலந்தாலோசித்து எதிர்காலத்தில் தீர்மானங்கள் எடுக்க முடியும் என்றும் அவைத்தலைவர் மேலும் தெரிவித்தார்.
 
இதன்போது கருத்துத்தெரிவித்த எதிரணி உறுப்பினர் தவநாதன், 
 
100 நாள் வேலைத்திட்டத்தில் ஜனாதிபதி முறைமை மாற்றப்பட்டால் ஆளுநர் என்ற ஒருவர் அவசியம் அற்றது. ஆளுநரும் ஒரு அதிகாரிபோலவே செயற்படுவார்.
 
எனவே ஆளுநருக்கான நிதி ஒதுக்கீடு அவசியமற்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

ad

ad