புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2015

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அந்த பதவிக்கான தகுதியில்லாதவர்-சட்டத்தரணி ஜே.சி. வெலியமுன


பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அந்த பதவிக்கான தகுதியில்லாத நிலையிலும் சட்டத்திற்கு முரணாகவும் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டதாக சட்டத்தரணி ஜே.சி. வெலியமுன தெரிவித்துள்ளார்.
கொழும்பு புதுக்கடை உயர்நீதிமன்றத்திற்கு எதிரில் இன்று நடைபெற்ற பிரதம நீதியரசரை பதவி விலக கோரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை அந்த பதவியில் இருந்து நீக்கும் போது நாடாளுமன்றத்தில் இணக்கத்தை பெறவில்லை.
அரசியலமைப்பின் 107 ஆம் ஷரத்திற்கு அமைய பிரதம நீதியரசரை பதவியில் இருந்து நீக்குமாறு நாடாளுமன்றம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க வேண்டும்.
அப்படியான யோசனை எதுவும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாது, பிரதம நீதியரசர் பதவிக்கு வெற்றிடம் ஏற்படாத நிலையிலேயே மொஹான் பீரிஸ்சை முன்னாள் ஜனாதிபதி பிரதம நீதியரசராக நியமித்தார்.
இந்த நியமனமானது அடிப்படையற்றது என்ற காரணத்தினால் மீண்டும் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.
அத்துடன் ஜனாதிபதித் தேர்தல் தினத்தில் ஒரு வேட்பாளரின் வீட்டில் இருந்தவர், பிரதம நீதியரசர் பதவிக்கோ வேறு நீதிபதி பதவிக்கோ பொருத்தமற்றவர் என்பது எம்முடைய நிலைப்பாடு.
இதனால், தொடர்ந்தும் நீதிமன்றத்தின் பதவியை அவமதிப்புக்கு உள்ளாக்காது மொஹான் பீரிஸ் பதவியில் இருந்து விலக வேண்டும் என நாம் கோருகிறோம் எனவும் வெலியமுன குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிரேஷ்ட சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டது சட்டரீதியானதல்ல என சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்புடைய செய்தி:

ad

ad