புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2015

கிழக்கில் மலர்கிறது தமிழரசு

கிழக்கு மாகாண சபையில் விரைவில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படவுள்ளது.

 
ஆட்சி மாற்றத்தின் பின்னர் அமையவுள்ள கிழக்கு மாகாண கூட்டணி அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இது தொடர்பில் இறுதி முடிவு எடுப்பதற்காக இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினரும் இன்று வியாழக்கிழமை சந்திப்பு ஒன்றை நடத்துகின்றனர்.
 
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணி உடைவுற்றது.
 
அதனைத் தொடர்ந்து அறுதிப் பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி ஆட்சி நடத்திய கிழக்கு மாகாணத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகியிருக்கிறது. 
 
இதேவேளை கிழக்கு மாகாண சபையில் எதிர்க்கட்சி வரிசையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 உறுப்பினர்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
அந்தவகையில் கிழக்கு மாகாண சபையில் வரும் 20 ஆம் திகதி ஆட்சி மாற்றம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 

ad

ad