புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2015

வலி.தென்மேற்கு பகுதிகளில் 10 கிணறுகளில் கழிவு ஒயில்!

வலி.தென்மேற்குப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் 10 கிணறுகளில் கழிவு ஓயில் கலந் துள்ளன என்ற பொதுமக்களின் முறைப்பாட்டை அடுத்து, அந்தப் பகுதி கிணறுகளின் தண்ணீர் மாதிரிகள் பரிசோதனைக்காகக் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. 

மானிப்பாய், சுதுமலை, மாகியப்பிட்டி ஆகிய இடங்களி லுள்ள 10 கிணறுகளிலேயே தண் ணீர் மாசடைந்துள்ளது. இவற்றில் 4 கிணறுகளில் அதிகளவு பாதிப்புத் தென்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பிரதேச சபை, சுகாதாரப் பரிசோத கர்களின் உதவியுடன் குறித்த கிணறுகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கொழும்புக்கு அனுப் பிவைக்கப்பட்டுள்ளன. பரிசோ தனை முடிவு வரும்வரை குறித்த கிணறுகளின் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவித்தனர் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.
 

ad

ad