புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2015

திருப்பதி கோவிலில் 180கோடி மாயமாம்

திருப்பதி ஏழுமலையான் கோவி லில் திட்டங்களை நிறைவேற்ற ஆண்டு தோறும் ரூ. 2400 கோடிக்கு பட்ஜெட் போடப்படுகிறது. இதனால் தேவஸ்தானம் குட்டி அரசு போல செயற்பட்டு வருகிறது.

திருப்பதி கோவிலில் முன்பு மாத த்துக்கு ஒருமுறை தேவஸ் தானம் சார் பில் கணக்குகள் தணிக்கை செய்ய ப்படும். அதன் பிறகு 2 மாதத்துக்கு ஒருமுறை கணக்குகள் செய்யப்பட் டது. அதன் பிறகு ஆந்திர அரசின் நிபந் தனையின்படி வரவு மற்றும் செலவு கணக்கை 3 மாதங்களுக்கு ஒரு முறை தேவஸ்தானம் உள் தணிக்கை செய்து வருகிறது.

மேலும் வருட த்துக்கு ஒருமுறை ஆந்திர அரசின் தணிக்கை துறை அதிகாரிகளும் சோதனை செய்து வருகின்றனர்.தேவஸ்தான கணக்கு வழக்கு களை செயல் அதிகாரி மற்றும் 2 செயல் இணை அதிகாரிகள் அடிக்கடி சோதனை செய்ய வேண்டும்.

ஆனால் அவ்வாறு சோதனை செய்யாததால் 180 கோடி ரூபாய் தேவஸ்தான கணக்கில் வராமல் மாயமாகியுள்ளதாக ஆந்திர மாநில தணிக்கை துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கான ஆவணங்களும் மாயமாகி இருப்பது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் தேவஸ்தான கணக்கு வழக்கில் மத்திய அரசின் தணிக்கை துறை தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று ஆந்திர அதிகாரிகள் மத்திய தணிக்கை துறைக்கு அறி க்கை சமர்ப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் ரூ.180 கோடி மாய மான விடயத்தை திருப்பதி தேவஸ் தான முதன்மை நிர்வாக அதிகாரி சாம்பசிவராவ் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார். அந்த பணம் எப்படி மாயமானது என்பதை கண்டுபிடிக்க அவர் தணிக்கையில் அனுபவம் வாய்ந்த நரசிம்மன், சரத்குமார் ஆகியோரை நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

ad

ad