புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2015


ரி-20 வெற்றிக் கேடயம் கொக்குவில் காமாச்சி வசம்
                     
மூளாய் ஐயனார் விளையாட்டுக்கழகம் நடாத்திய 11 பேர் கொண்ட ரி-20 கிரிக்கெட் போட்டியில் கொக்குவில் காமாச்சி வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்தது.

நேற்று மூளாய் ஐயனார் விளையாட்டுக் கழகம் நடாத்திய கிரிக்கெட் போட்டியில் உடுவில் சலஞ்சஸ் அணியும் கொக்குவில் காமாச்சி அணியும் மோதின.
 
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற உடுவில் சலஞ்சஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கள் நிறைவில் 147ஓட்டங்களுக்கு 7விக்கெட்டுக்களை இழந்தது.இதில் கிங்சன் தனக்கென 48 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.
 
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கொக்குவில் காமாச்சிக்கு  வெற்றி இலக்காக 148 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.அதன்படி காமாச்சி 17.2ஓவர்கள் நிறைவில் 152 ஓட்டங்களுக்கு 8விக்கெட்டுக்களை பெற்று வெற்றி பெற்றது.இதில் டிக்சன் 49ஓட்டங்களும்இநிக்சன் 37ஓட்டங்களும் அணிக்காகப் பெற்றுக் கொடுத்தனர்.
 
இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக டிக்சன் தெரிவானார்.
 
மேலும் இந்தக் கிரிக்கெட் போட்டிக்கு பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் வருகை தந்து வெற்றி பெற்ற அணிக்கு கேடயத்தை வழங்கி வைத்தார்.

ad

ad