புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2015

பிளஸ் –2 மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்


மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வெயூர் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் லதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 17 வயதாகும் இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார்.

இந்த நிலையில் லதாவுக்கும், அவரது உறவினரான சுரன்ராஜ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த திருமணம் இன்று (22–ந்தேதி) நடைபெற இருந்தது.

ஆனால் மணப்பெண் லதா சட்டப்படி திருமண வயதை எட்டவில்லை என்று மாவட்ட சமூக நல அதிகாரி ஆனந்தவள்ளிக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் டி.கல்லுப்பட்டி சமூக நல விரிவாக்க அதிகாரி ராஜம்மாள், போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், ஊர்நல அதிகாரி சந்திரா மற்றும் போலீசார் லதாவின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

அப்போது மணப்பெண் லதா மைனர் என்று தெரியவந்தது. எனவே இந்த திருமணம் சட்டப்படி தவறானது என்று அதிகாரிகள் பெற்றோரை எச்சரித்து திருமணத்தை தடுத்து நிறுத்தினார்கள்.

இதை தொடர்ந்து மாணவி லதா, மதுரை அரசு மகளிர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

ad

ad