புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2015


தமிழ்நாட்டில் 3 லட்சம் போலி எரிவாயு இணைப்புகள் முடக்கம்

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாக நுகர்வோரின் வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது.

இந்தியா முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தும் நுகர்வோர்களின் எண்ணிக்கை மொத்தம் 14 கோடியே 45 லட்சத்து 893 ஆக உள்ளது. இதில் தற்போது 10 கோடியே 55 லட்சத்து 263 பேர் நேரடி மானிய திட்டத்தில் இணைந்துள்ளனர்.

சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தும் அனைவரையும் நேரடி மானிய திட்டத்தில் இணைக்க எண்ணெய் நிறுவனங்கள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழ்நாட்டில் மொத்தம் 1 கோடியே 51 லட்சம் நுகர்வோர்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளனர். இதில் 1 கோடியே 6 லட்சம் பேர் கியாஸ் மானிய திட்டத்தில் இணைந்துள்ளனர்.

இந்த திட்டத்தில் சேர்ந்த பிறகு சிலிண்டர் பதிவு செய்த நுகர்வோர்களுக்கு முன்பணம் மானிய தொகையாக சுமார் ரூ.313 கோடியே 27 லட்சம் நுகர்வோர் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

நேரடி எரிவாயு மானிய திட்டம் அமுல்படுத்தப்பட்ட பிறகு மாநிலத்தில் போலி எரிவாயு இணைப்பு வைத்திருந்த சுமார் 3 லட்சம் பேரின் எரிவாயு இணைப்பு முடக்கப்பட்டுள்ளது.

மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்த தகுதி உடைய அனைவரையும் நேரடி மானிய திட்டத்தில் இணைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

ad

ad