புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2015

அதிர்ச்சி கொடுத்த அயர்லாந்து: 4 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது



மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் அயர்லாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
உலகக்கிண்ணத் தொடரில் 5வது லீக் போட்டியில் இன்று அயர்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி அதிரடியில் அசத்தியது. இதனால் 50 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 304 ஓட்டங்களை எடுத்தது.
அந்த அணிக்கு சிம்மோன்ஸ் 102 ஓட்டங்கள் (9 பவுண்டரி, 5 சிக்சர்), டெரன் சமி 89 ஓட்டங்கள் (9 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து கைகொடுத்தனர்.
மேலும் வெய்ன் சுமித் (18), கிறிஸ் கெய்ல் (36), சாமுவேல்ஸ் (21), ரஸ்ஸீல் (27) ஆகியோர் ஓரளவு ஓட்டங்கள் குவிக்க கடினமான ஓட்டங்களை அயர்லாந்து அணிக்கு இலக்காக கொடுத்தது மேற்கிந்திய தீவுகள்.
அயர்லாந்து தரப்பில் பந்து வீச்சில், ஜார்ஜ் டாக்ரெல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், கெவின் ஓ பிரையன், ஜான் மூனி, ஆண்டி மெக்பிரைன் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பிறகு 305 ஓட்டங்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை கைப்பற்ற திணறினர்.
இதன் காரணமாக அயர்லாந்து அணி 45.5 ஓவர்களிலே இலக்கை எட்டியது. அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 307 ஓட்டங்களை எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அணித்தலைவர் வில்லியம் போர்ட்டர்பீல்டு 23 ஓட்டங்களையும், பால் ஸ்டிர்லிங் 92 ஓட்டங்களையும் (9 பவுண்டரி, 3 சிக்சர்), எட் ஜாய்ஸ் 84 ஓட்டங்களையும்(10 பவுண்டரி, 2 சிக்சர்) எடுக்க, நியால் ஓ பிரையன் 79 ஓட்டங்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவருடன் ஜான் மூனி 6 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.
பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் தரப்பில், டெய்லர் 3 விக்கெட்டுகளையும், கெய்ல், சாமுவேல்ஸ் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ad

ad