புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2015

 கொத்தடிமை கொடுமையின் : தாய்ப்பால் புகட்ட என்ஜினீயர் அனுமதிக்காததால் 6 மாத குழந்தை பரிதாப பலி

கூலி வேலை செய்யும் தொழிலாளர்களை செல்வந்தர்களும், அதிகாரத்தின் மேலிடத்தில் இருப்பவர்களும் எப்படி கொத்தடிமையிலும் கேவலமாக நடத்தி வருகின்றனர் என்பதற்கு சமீபத்திய உதாரணமாக பசியால் துடித்து அழுத 6 மாத ஆண் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவதற்கு கூட ஒரு கட்டுமான நிறுவனத்தின் என்ஜினீயர், அங்கு கூலி வேலை செய்த பெண்ணுக்கு அனுமதி அளிக்க மறுத்ததால் அழுதழுது, தொண்டை வறண்டு அந்தப் பச்சிளம் பாலகன் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கானா மாநிலத்தின் மெஹபூப் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், மேடக் மாவட்டத்தின் ஹட்னூரில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை செய்தபடி, பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தகரக் கொட்டகையில் வசித்து வந்தார். 

சம்பவத்தன்று, வழக்கமாக அந்தப் பெண் வேலை செய்து கொண்டிருந்தபோது, தகர கொட்டகைக்குள் பசியால் அழுத தனது 6 மாத ஆண் குழந்தைக்கு பாலூட்டி விட்டு வருவதற்காக புறப்பட்டார். அப்போது, அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த என்ஜினீயர் அந்தப் பெண்ணை போக விடாமல் தடுத்தார். 

ஒரு 5 நிமிடங்கள் அனுமதி கொடுங்கள். என் குழந்தை பசியால் துடித்து கொண்டிருக்கும்போது என்னால் எப்படி நிம்மதியாக வேலை செய்ய முடியும்? என அந்தத் தாய் எழுப்பிய உரிமைக்குரல் அதிகார வர்க்கத்தின் காதில் விழவில்லை. இதன் விளைவாக அழுதழுது தொண்டை வறண்டுப் போன அந்த பச்சிளம் தளிர் சில நிமிடங்களில் பரிதாபமாக உயிரிழந்தது. 

இந்த சம்பவம் கடந்த 7-ம் தேதி நடைபெற்றுள்ளது. பலியான குழந்தையும் புதைக்கப்பட்டு சுமார் 10 நாட்கள் கடந்த நிலையில் இந்த கொடூர சம்பவம் தொடர்பான செய்தி தற்போது வெளியே வந்துள்ளது. இதனையடுத்து, ஹட்னூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ad

ad