புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 பிப்., 2015

உலகக்கிண்ணத்தில் சுப்பர் ஓவர் நீக்கம் : பரிசுத் தொகை ரூபா 60 கோடி

 2015 ஆம்ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் நொக் அவுட் சுற்றில் சுப்பர் ஓவர் நீக்கப்பட்டுள்ளதுடன்
பரிசுத் தொகையாக ரூபா 60 கோடி வழங்கப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 29ஆம் திகதி வரை அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இடம்பெறவுள்ளது.
இந்தப் போட்டி குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) நேற்று ஆலோசனை செய்தது.
இதன்படி உலகக் கிண்ண நொக்அவுட் சுற்றில் சுப்பர் ஓவரை நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

காலிறுதியிலோ அல்லது அரை இறுதியிலோ ஆட்டம் சமநிலையில் முடிந்தால் சுப்பர் ஓவர் முறை பின்பற்றப்பட மாட்டாது. குழு ஆட்டத்தில் அதிக புள்ளிகள் பெற்றதன் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.
அதேவேளை, இறுதி ஆட்டம் சமநிலையில் முடிந்தாலோ அல்லது மழையால் பாதிக்கப்பட்டு நடைபெற முடியாமல் போனாலோ இரு அணிகளுக்கும் இணைந்து கூட்டாக கிண்ணம் வழங்கப்படும்.

உலகக் கிண்ண போட்டிகள் நடைபெறும் 49 ஆட்டமும் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறை பின்பற்றப்படும். இந்தப்போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.60 கோடியாகும்.
2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியை விட இது 20 சதவீதம் கூடுதலாகும். இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்திய 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் மொத்தம் ரூ.48 கோடி பரிசுத் தொகை தான் வழங்கப்பட்டது.

2015ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் சம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.23.85 கோடி பரிசாக வழங்கப்படும்.
அதேநேரத்தில் தோல்வி எதையும் சந்திக்காமல் கிண்ணத்தை கைப்பற்றினால் ரூ.24 கோடி வழங்கப்படும். 2ஆவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.10 கோடியும், அரை இறுதியில் தோற்கும் அணிகளுக்கு தலா 3.6 கோடியும், காலிறுதியில் தோற்கும் 4 அணிகளுக்கு தலா ரூ.1.8 கோடியும் வழங்கப்படும்

ad

ad