புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2015

வடக்கில் 6000 வெற்றிடங்கள்; நிவர்த்தி செய்ய நடவடிக்கை என்கிறார் கரு ஜெயசூரிய
                     
வடக்கு மாகாணத்தில் 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட அரச ஊழியர்களின் வெற்றிடங்கள் இன்னமும்  நிரப்பப்படாது காணப்படுகின்றன என வடக்கு முதலமைச்சர் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோர் இணைந்து உள்ளூராட்சி  அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வடக்கு முதல்வர் க.வி.விக்கினேஸ்வரன் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கரு ஜெயசூரிய தலைமையில் நேற்று யாழ். பொதுநூலகத்தில் நடைபெற்றது.
 
அதன்போது வடக்கு மாகாண பிரதம செயலர் பத்திநாதன் தனது வரவேற்புரையிலும் முதல்வர் தனது உரையிலும் இதனைத் தெரிவித்துள்ளனர். 
 
 
2009 ஆண்டுக்குப் பின்னர் வடக்கில் வழங்கப்பட்ட நிதி மூலங்கள் குறித்தும் தெளிவுபடுத்தினார். அத்துடன் வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சி மிகக் குறைவாக காணப்படுவதாகவும் அதனை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் விலியுறுத்தினார்.
 
அதுபோல கடந்த காலங்களில் நெல் விளைச்சல் குறைவாக இருந்ததாகவும் பழங்களுடைய விளைச்சல் அதிகரித்து இருந்ததாகவும் பிரதம செயலர் தெரிவித்திருந்தார். 
 
மேலும் வடக்கு மாகாணத்தில் 34ஆயிரத்து 510 அரச ஊழியர்கள்  பணியாற்றக் கூடிய இடங்கள்  இருக்கின்றன. ஆனாலும் தற்போது 27 ஆயிரத்து 903 பேர் மாத்திரமே பணியாற்றி வருகின்றனர்.
 
 
எனவே வடக்கு மாகாணத்தில் 6ஆயிரத்து 607 வெற்றிடங்கள்  நிரப்பப்படவில்லை. இதே வெற்றிடத்தை முதலமைச்சரும் தன்னுடைய உரையில் சுட்டிக்காட்டியிருந்ததுடன் மிகவிரைவில் நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியிந்தார். 
 
இதனையடுத்து உரையாற்றிய கரு ஜெயசூரிய 16 பொது மக்களுக்கு ஒரு அரச உத்தியோகத்தவர் என்ற ரீதியில் இலங்கையில் உத்தியோகத்தவர்கள் உள்ளனர். எனினும் பட்டதாரிகளை வருடாவருடம் நிர்வாக சேவைக்குள்  உள்வாங்க திட்டமிட்டுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார். 

ad

ad