புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2015

இந்திய அகதி முகாமில் தங்கியுள்ள இலங்கை மாணவி மாநில அளவில் இடம்பெற்ற ஓவியப் போட்டியில் இரண்டாமிடம்


news
இந்திய அகதி முகாமில் தங்கியுள்ள இலங்கை மாணவி மாநில அளவில் இடம்பெற்ற ஓவியப் போட்டியில் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
 
திருகோணமலையை சேர்ந்த மாணவி சல்மியா என்ற மாணவியே இந்த சாதனையினை படைத்துள்ளார்.
 
இவர் கடந்த மாதம் மாவட்ட அளவில் நடந்த ஓவிய போட்டியில் முதலிடம் பிடித்தார். பின்,' மரம் நடுவோம், மழை பெறுவோம்' என்ற தலைப்பில், வேலூரில் நடந்த மாநில ஓவிய போட்டியில், 2ஆம் இடம் பிடித்து கல்வி அமைச்சரிடம் பரிசு பெற்றார். 
 
இது குறித்து கருத்து தெரிவித்த அவர்,இலங்கை இரானுவத்தின் குண்டு மழைக்கு எனது குடும்பம் தப்பினாலும், அங்கு பல சொந்தங்களை இழந்தோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தூங்கும் போது கூட கனவில் குண்டு சத்தம் கேட்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உலகில் அமைதி ஏற்படவும், பசுமை புரட்சி வலியுறுத்தி நான் வரைந்த ஓவியத்திற்கு, மாநில அரசின் பாராட்டு கிடைத்தது, மகிழ்ச்சியாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad