புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2015

நா. அறிக்கை வெளியீடு ஆணையாளரின் கையில்; அமெரிக்கா தெரிவிப்பு

                                                                                 
                     
இலங்கையில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நாவின் விசாரணை அறிக்கையை வெளியிடுவது தொடர்பில் முடிவெடுக்க வேண்டியது ஐக்கிய நாடுகள் பேரவையின் மனித உரிமைகள்  ஆணையாளரே என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
 
விசாரணை அறிக்கையை எதிர்வரும் மார்ச்மாத அமர்வில் சமர்ப்பிப்பதா, விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதா என்பதனை அவரே தீர்மானிக்க வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜென் பெசாகீ கூறியுள்ளார். 
 
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் மீது நம்பிக்கை காணப்படுகின்றது எனவும், சரியான தீர்மானத்தை அவர் எடுப்பார் எனக் கருதுகின்றோம் எனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 
 
அமெரிக்கா வந்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி புதிய அரசின் 100 நாள் வேலைத் திட்டம், நல்லிணக்க முனைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துப் பேசினார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எவ்வாறாயினும் இலங்கையில் 30 வருடங்கள் போர் இடம்பெற்றுள்ள நிலையில் குற்றச்செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகிய சர்வதேச கடப்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என ஜோன் கெரி இந்தச் சந்திப்பின்போது வலியுறுத்தினார் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
 
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கவும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து அமெரிக்கா செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
சிறந்த வழிகளில் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணவே அமெரிக்கா விரும்புகின்றது என்றும் இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜென் பெசாகீ மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad