புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2015

கண்டி மாவட்டத்தில் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை விரும்பாத மக்களின் நோக்கம் என்ன?


கண்டி மாவட்ட மலையக மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் சவால்களும் என்ற தொனிபொருளில் கண்டி மனித அபிவிருத்தி தாபனத்தின் தலைவர் பி.பி. சிவப்பிரகாசம். அவர்களின் அயராத முயற்சியால் நேற்று கண்டி இந்து கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
இச் செயற்பாடு காலத்தை அறிந்து பொருத்தமான நேரத்தில் ஏற்ப்பாட்டாளர் பி.பி. சிவப்பிரகாசம் மேற்க் கொண்டிருந்தமை பாராட்டதக்க ஒன்றாகும்.
மலையக இந்திய வம்சாவழி சனத்தொகை செறிவின் படி மூன்றாவது இடத்தை வகிக்கின்றது. இம்மாவட்டத்தில் ஏறக்குறைய 154321 (2012) தமிழர்கள் வாழ்கின்றனர். தமிழ் வாக்காளர்கள் ஏறக்குறைய 95.000 பேர்களாக காணப்படுகின்றனர். ஆனால் இம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்தில் எந்த கட்சியையும் சார்ந்த ஒரு பிரதிநிதியேனும் இல்லாமை பாரியதொரு பிரச்சினையாக காணப்படுகின்றது. சனத்தொகை அடிப்படையில் அவதானிக்கும் பொழுது, ஆகக்குறைந்தது இரண்டு பிரதிநிதிகளையாவது கண்டி மாவட்டத்திற்கு தெரிவு செய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. இந்த அரசியல் பின்னடைவிற்கு மலையக அரசியல் கட்சிகள் மாத்திரமன்றி, தொழிற்சங்கங்கள், சமூக அமைப்புகள், சமய நிறுவனங்கள், வர்த்தக சமூகம், புத்திஜீவிகள் கண்டி மாவட்ட தமிழ் வாக்காளார்களும் பதில் சொல்ல வேண்டியவர்களாக இருக்கின்றனர். இந்த பின்னணியில் கண்டி வாழ் மலையக தமிழ் மக்கள் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து சிந்திக்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது.
அதேவேளை கண்டி மாவட்டத்தின் 180.000 ஆயிரம் முஸ்லிம் சகோதர மக்களில் 112.000 வாக்களர்கள் காணப்படுகின்றார்கள். அவர்களில் 3 பேர் தற்போது பாராளுமன்ற உருப்பினர்களாக காணப்படுகின்றனர். இந்நிலையில் கண்டி மாவட்டத்தில் 154321 சனத்தொகையில்  95.000 தமிழ் வாக்காளர்கள்; காணப்பட்ட போதும் ஒரு தமிழ் பாராளுமன்ற உருப்பினர் கூட இல்லாமை வேதனைக்குறியதாகும். இதனை சிந்தித்து கண்டி மாவட்ட வாக்காளர்கள் எதிர்காலத்தில் வாக்களிக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
மேற்படி நிகழ்வில் மங்கள விளக்கேற்றல், வரவேற்புரை, விளக்கவுரை பி.பி. சிவப்பிரகாசம் (கண்டி மனித அபிவிருத்தி தாபனம்) கருத்துறைகள் கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ் (இலங்கை திறந்த பல்கலைகழகம்), எஸ். பரஞ்சோதி – சட்டத்தரணி, ஆர்;.மகேஸ்வரன் - (பேராதனை பல்கலைகழகம்), பொன்.இராமநாதன் - (இந்து மாமன்ற அரக்கட்டளை – கண்டி) ஆகியோர் நிகழ்த்தினர்.
இவ்வுரைகளில் பலதரப்பட்ட வரலாறுகள், புள்ளி விபரங்கள், கடந்தகால சம்பவங்கள், நன்மை தீமைகள் போன்றன முன் வைக்கப்ட்டன அவை ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும். கட்டாயம் கண்டி மாவட்டத்தில் இழந்த தமிழ் பிரதிநிதித்துவம் உருவாக்கபட வேண்டும். இழந்த பிரதிநித்துவத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்மிக்கையையும் ஏற்படுத்தியது. அந்த வகையில் இவர்கள் கூறியது போல் கண்டி மாவட்ட வாக்காளர்களுக்கு தெளிவுப்படுத்தினால் கட்டயாயம் கண்டி மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதித்துவம் உருதி செய்யப்டும் என்பதில் ஐயமில்லை.
தொடர்ந்து இதற்கு  பதில் உரைகளை அரசியல் துறைசார்ந்தவர்காளன. துரை மதியுகராஜா- மத்திய மாகாண உறுபினரும் இ.தொ.கா. உப தலைவர், முன்னாள் மத்திய மாகாண சபை உருப்பினர் எஸ்.இராஜரட்ணம், மத்திய மாகாண சபை உருப்பினர் வி.குமார், மலையக மக்கள் முன்னனி சார்பில் விரிவுரையாளர் விஜேசந்திரன், ஜனநாயக மக்கள் முன்னியின் தலைவரும் மேல் மாகாண சபை உருப்பினருமான மனேகணேசன். ஆகியோர் நிகழ்த்தினர்.
இவ்வுரைகளில் இவர்களின் பாராளுமன்ற தோல்விக்கான காரணங்கள் பல முன் வைக்கப்பட்டன. தமிழ் பிரதிநித்துவத்தின் முக்கியத்துவம், அதனை பெற்றுக் கொள்வதில் உள்ள சலால்கள், அதற்காக தாங்கள் எதிர் நோக்கிய பிரச்சனைகள், எவ்வாறு இழந்த தமிழ் பிரதிநிதித்துவத்தை மீண்டும் கொண்டு வரலாம் போன்ற பல கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. எவ்வாராயினும் எதிர் காலத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை மேற்க்கொள்ள எடுத்த   ஒருங்கினைப்பு குழு அமைத்தல் செயல் இடையில் அமளிதுமலியால் தோல்வியில் முடிவடைந்தது. 
இந்த பொதுகருத்து பகிர்வின் நோக்கம். கண்டி மாவட்ட மலையக மக்களின்  தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதிபடுத்த பொது பகிர்வால் ஒருங்கினைப்பு குழு அமைத்தலின் ஊடாக அமுக்க குழுக்களை உருவாக்கி அவர்கள் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புனர்வை ஏற்ப்படுத்தி கண்டி மாவட்டத்தில் இழந்த தமிழ் பிரதிநிதித்துவத்தை பெருவதாகும்.
இங்கு நடைபெற்ற கருத்தாடலின் போது வளவாளர்களின் கருத்துரைகளையும் அரசியல்வாதிகளின் பதிலுரைகளையும் கேட்ட இவர்கள் பொது மக்களின் கருத்தாடலின் போது அதனை செவிமடுக்கவில்லை. இவர்களில்  சிலர் படம் பிடிப்பதிலும் தங்கள் சொந்த கதைகளை  கதைப்பதிலும்  வேறு வேறு வேலைகளில் ஈடுப்பட்டதினாலும் மக்கள் குழப்பமடைந்தனர். சிலர் கோபமடைந்து கொதித்தெழும்மினர். அப்படி இருந்தும் முறையாக வாக்காளர்களின்    (மக்கள்) பிரச்சனைகளை கேட்டகாததினால் பலர் வெளியேறினர். கண்டி மாவட்டத்தில் இழந்த தமிழ் பிரதிநிதித்துவத்தை மீள் நிரப்ப எடுத்த முயற்சி கை விடப்பட்டது. மக்கள் தாங்கள் எண்ணி வந்த கருத்துக்களை முன் வைக்க முடியவில்லை வாக்கார்களின் விருப்பு வெறுப்பு, ஏன் கண்டி மாவட்ட மக்கள் தமிழ் பிரதிநிதித்துவத்தை கொண்டு வர முயற்சிக்க மாட்டேன் என்கின்றார்கள், இவர்களுக்கு உள்ள பிரச்சனை என்ன?, அப்படியாயின் என்ன செய்ய வேண்டும், போன்ற இன்னோரன்ன கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை. பொது பகிர்வால் ஒருங்கினைப்பு குழு அமைத்தல் செயல்பாடும் நடைபெறவில்லை. கண்டி மனித அபிவிருத்தி தாபனத்தின் தலைவர் பி.பி. சிவப்பிரகாசம். அவர்களின் அயராத முயற்சியால் மேற்க்கொள்ளப்பட்ட இந் முயற்சி பயனற்றதாக போய்விட்டது. இந்த சந்திப்பிற்கு கல்விமான்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், நகர வர்த்தகர்கள், பெண்கள், ஊடகவியலாளர்கள், தோட்ட தொழிலாளர்கள், இளைஞர், யுவதிகள் மிகவும் சமூகப்பற்றுடன் கலந்துக் கொண்டார்கள். அவர்களின் கனவும் வீன் போனது.
இந் நிலை தொடருமாயின் கண்டி மாவட்டத்தில் இழந்த தமிழ் பிரதிநிதித்துவத்தை பெருவது மீண்டும் பழைய நிலைக்கே செல்லும் இதற்கு கண்டி மாவட்ட தமிழ் வாக்களர்களாவது எதிர்காலத்தில் சிந்தித்து செயற்பட வேண்டும் அரசியல்வாதிகள் ஒன்றுபடுதை விட மக்கள் ஒன்று பட்டு சிந்தித்து செயற்பட வேண்டிய காலம் வந்து விட்டது. மக்கள் தங்களுக்கு விருப்பமான ஒரு தமிழரை தெரிவு செய்து தங்கள் பிரதிநிதியாக பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். அரசியல்வாதிகள் மக்களின் கருத்திற்கும் விருப்பத்திற்கும் கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மக்கள் விருப்புக்களை கேட்காதவர்களின் நிலமை கடந்த கால தேர்தல்கள் நல்ல பாடங்களை புகட்டியுள்ளது. அதை மறந்து விட வேண்டாம். வாக்காளர்களின் விருப்பு வெருப்பிற்கு ஏற்ப அரசியல்வாதிகள் நடந்துக் கொண்டாலே கண்டி மாவட்டத்தில் இழந்த தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற முடியும். எது எவ்வாராயினும் தற்போது   கண்டி மாவட்ட தமிழ் வாக்கார்கள் இழந்த தமிழ் பிரதிநிதித்துவத்தை பெருவதற்கு முன்னோக்கி வருகின்றனர். இதை பெற்று பாராளுமன்றம் செல்ல விரும்புபவர்கள் மக்களின் கருத்துக்களை செவிமடுங்கள். ஏன் அவர்கள் வாக்கு போட்டால் தான் நீங்கள் பாராளுமன்றம் போக முடியும்.

ad

ad