புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 பிப்., 2015

சுவிஸ் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிச்சரிவு: நான்கு பேர் பலி



சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
சுவிஸின் Graubünden மாநிலத்துக்கு உட்பட்ட பனிமலையில் 9 நபர்கள் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுப்பட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராமல் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் சிக்கி 8 பேர் புதையுண்டனர். இந்த விபத்தில் ஒருவர் மட்டும் தானாகவே போராடி வெளியேறி உயிர் பிழைத்தார்
எஞ்சிய நபர்களை மீட்க விபத்து பகுதிக்கு வந்த மீட்பு குழுவினர் புதையுண்ட 7 பேரையும் மீட்டனர். அவர்களில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட மீதி 4 பேரையும் ஹெலிகாப்டர் உதவியுடன் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற தகவலை பொலிசார் இன்னும் வெளியிடவில்லை.
இந்த விபத்து குறித்து பேசிய பொலிசார், கடந்த வாரம் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவால் பனிச்சரிவு அடிக்கடி ஏற்படுவதாக எச்சரிக்கை விடுத்தும் ஆல்ப்ஸ் மற்றும் ஜூரா பகுதிகளில் உயிரிழப்பு ஏற்படுவது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், கடந்த 3 நாட்களில் மட்டும் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ad

ad