புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2015

மகிந்தவுக்கு கூ,கூ சத்த அபிஷேகம்


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, காலியில் உள்ள பிரபல தேசிய பாடசாலை ஒன்றின் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவரது உரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிலர் கூ, கூவென சத்தமிட்டுள்ளனர்.
வைபவத்தில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச, அரச ஊடகங்கள் தனக்கு எதிராக சேறுபூசுவதாகவும் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி இப்படி கூறியதும் கூட்டம் நடைபெற்ற மண்டபத்தில் பின் இருக்கையில் இருந்தவர்கள் கூவென சத்தமிட்டுள்ளனர்.
இதனால், தனது உரையை கொஞ்ச நேரம் நிறுத்திய மகிந்த மீண்டும் ஆரம்பித்தார். மீண்டும் தனக்கு எதிராக சேறுபூசப்படுவதாக கூறிய கதையையே அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து கூட்டத்தில் வந்திருந்த பலர் மீண்டும் கூவென சத்தமிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் எந்த ஊடகங்களுக்கும் செல்லாதவகையில் பார்த்துக் கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி வைபவத்தை ஒழுங்கு செய்தவர்களிடமும் பாடசாலை அதிபரிடம் கேட்டுக்கொண்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ad

ad