புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2015

தேச பாதுகாப்பை அச்சுறுத்தும் தாதுமணல் கொள்ளை - மத்திய அரசு மவுனம் காப்பது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி



நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் தாது மணல் கொள்ளை குறித்து விசாரணை செய்ய மத்திய அரசு ஏன் இதுவரை அக்கறை காட்டவில்லை என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தன் முகனூல் வாயிலாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தாது மணல் கொள்ளை குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்திரவிட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதவிற்கு மிகவும் நெருங்கிய தொடர்பு உள்ள வி.வி.மினரல்ஸ் கம்பெனியின் 1,00,000 கோடி ரூபாய் முறைகேட்டுப் புகார் தொடர்பாக கவனிக்கப்பட வேண்டிய மேலும் சில அவசர விவகாரங்கள் இருக்கின்றன.

இது ஒரு மெகா ஊழல் என்பது ஒருபுறமிருக்க, சட்டவிரோதமாக லாபம் அடைவதற்காக அணுசக்தி எரிபொருட்களை பிரித்தெடுக்கப் பயன்படும் மோனோசைட் போன்ற கனிமப் பொருட்களை ஏற்றுமதி செய்ததில் தேசிய பாதுகாப்பு கைகழுவப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. இந்திய சட்டங்களின் படி கதிரியக்கத்திற்குப் பயன்படும் கனிமப் பொருட்களை சுரங்கங்களில் இருந்து தனியார் பிரித்து எடுக்கவோ, கையாளவோ கூடாது
என்ற விதிமுறைகள் மீறப்பட்டு, மோனோசைட்டை இந்த தனியார் கம்பெனி எடுத்தது மட்டுமின்றி, பெயர் கூறப்படாத நாடுகளுக்கு எல்லாம் ஏற்றுமதியும் செய்திருக்கிறது.

ஆகவே இது பற்றி உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்திரவிட வேண்டும். மிகப் பெரிய முறைகேடு நடைபெற்றிருக்கிறது என்று வெளியில் தெரிய வந்த பிறகும் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் பாரதிய ஜனதா தலைமையில் உள்ள மத்திய அரசு ஏன் அமைதி காக்கிறது? அதிலும் முக்கியமாக, இந்த ஏற்றுமதி விவகாரம் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று தெரிந்த பிறகும் இந்த முறைகேடு குறித்து விசாரணை செய்ய மத்திய அரசு ஏன் இதுவரை அக்கறை காட்டவில்லை?

In continuation of DMK's demand for a CBI inquiry. There are urgent issues that need to be probed in the 1,00,000 crore scam by V.V.Minerals, a company that is closely tied to former chief minister Jayalalitha.

Besides the size of the scam, the doubt arises whether national security has been compromised by this export of minerals for illicit financial gains. A radioactive material that is explicitly forbidden to be mined by private companies under Indian laws has been mined and exported to unknown countries. The CBI should be asked to look into this affair immediately. Why is the BJP led Central government keeping quite when a scam of such massive proportions has been unearthed? More importantly why is it showing little interest when there might be far reaching security implications for our nation?

ad

ad