புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 பிப்., 2015

நம்ம நாட்டுக்காரங்க!




விறுவிறுப்பாக நடந்துகொண்
டிருக்கிறது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள். மற்ற நாடுகளுக்காக விளையாடிக்கொண்டிருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீரர்களைப் பற்றித் தெரிந்துகொள்வோமா?
குரிந்தர் சிங் சண்டு : 21 வயது இடதுகை வேகப்பந்து வீச்சாளரான குரிந்தர் சிங், ஆஸ்திரேலிய ஆண்கள் அணியில் இடம்பிடித்த முதல் இந்திய வம்சாவளி வீரர். இவருடைய அப்பா இக்பால் பஞ்சாப்பில் இருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறியவர். முதல்தரப் போட்டிகள், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட், ஆஸ்திரேலிய உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இடம்பிடித்த இவர், இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளில் டெல்லி அணிக்காக ஆடியிருக்கிறார். 2015 ஜனவரியில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி, இரண்டே இரண்டு போட்டிகளில் விளையாடியிருக்கும் குரிந்தர் சிங் ‘எதிர்கால’ ஆஸ்திரேலிய அணியின் முக்கியமான பந்துவீச்சாளர். குரிந்தர் சிங்கின் சர்வதேச அறிமுகப்போட்டி இந்தியாவுக்கு எதிராக என்பது அடடே ஆச்சர்யக்குறி!
ஸ்வப்நில் பிரகாஷ் படேல் : விக்கெட் கீப்பரும், வலது கை ஆட்டக்காரருமான ஸ்வப்நில் பிரகாஷ் படேல் மஹாராஷ்டிராவில் பிறந்தவர். கத்துக்குட்டி அணியான ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்காக விளையாடிக்கொண்டிருக்கிறார். பிரகாஷ் படேல் 2005, 06-ல் மும்பை அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடிக்கொண்டிருந்தவர்... பின் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குடியேறி, அந்த நாட்டு உள்ளூர் போட்டிகள், மற்றும் 20/20 போட்டிகளில் களம் கண்டார். இதுவரை ஆறு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவருக்கு, பிப்ரவரி 2014-ல் ஸ்காட்லாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டிதான் முதல் சர்வதேச ஒருநாள் போட்டி. இந்தப் போட்டியில் 99 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார் ஸ்வப்நில்!
கிருஷ்ண சந்திரன் : அக்மார்க் இந்திய வீரர். பாலக்காடு அருகேயுள்ள கொல்லங்கோடு இவருடைய சொந்த ஊர். சென்னை செயின்ட் ஜோன்ஸ் பள்ளியில் படித்தவர். தினேஷ் கார்த்தி, ராபின் உத்தப்பா, சாந்த் ஆகிய இந்திய வீரர்களுடன் இணைந்து உள்ளூர் போட்டிகள், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடியிருக்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் ‘ஐக்கிய அரபு எமிரேட்ஸ்’ அணியில் இடம்பெற்று சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த சந்திரன், பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கலக்கும் ‘ஆல்ரவுண்டர்’. இதுவரை 7 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் இவர், ‘இந்தியாவைப் பொறுத்தவரை முதல்தரப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்தால் மட்டுமே அடுத்தடுத்த லெவலுக்குப் போக முடியும். தவிர, அங்கே அரசியலும் அதிகம். என்னோடு இருந்தவர்கள் அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பெற்று போனபோது எனக்கு வருத்தமாக இருந்தது. அதனால், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குடியேறி இங்கே வாய்ப்பு பெற்று ஆடுகிறேன்’ என சமீபத்தில் ஃபீலிங் ஸ்டேட்டஸ் கொடுத்திருந்தது கவனிக்க வேண்டிய விஷயம்!
ரவி போபரா :  இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ‘டாப் ஆர்டர்’ பேட்ஸ்மேன்களில் ஒருவர். ஹரியானாவில் இருந்து இங்கிலாந்துக்குக் குடியேறியது ரவி போபராவின் குடும்பம். பிறகு இங்கிலாந்து பள்ளி கிரிக்கெட் போட்டிகள், முதல்தர கிரிக்கெட் போட்டிகள் என பல படிகளைக் கடந்து இங்கிலாந்து அணியில் இடம்பிடித்தவர். 2007-ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான இவர், இதுவரை 119 ஒருநாள் போட்டிகள், 13 டெஸ்ட் போட்டிகள், 38  20/20 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். பேட்டிங் மட்டுமல்லாமல் பந்து வீசுவதிலும் சிறப்பாகச் செயல்படும் ரவி போபரா, மூன்று வித சர்வதேசப் போட்டிகளிலும் சேர்த்து இதுவரை 4 சதம், 14 அரைசதம் உள்பட 39 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார்.
இங்கிலாந்து வீரர் மான்டி பனேசர், இங்கிலாந்து முன்னாள் வீரர் நாஸர் ஹுசைன், நியூசிலாந்து முன்னாள் வீரர் தீபக் படேல் மற்றும் கனடா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளில் இடம்பெற்ற பல கிரிக்கெட் வீரர்கள் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்களே!

ad

ad