புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 பிப்., 2015

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் ஆசிரிய பயிலுநர்கள்; பங்கேற்ற வீதியோட்ட நிகழ்வு

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் ஆசிரிய பயிலுநர்கள்; பங்கேற்ற வீதியோட்ட நிகழ்வு 31.01.2015 சனிக்கிழமை காலை 6 மணிக்கு கலாசாலை முன்றிலில் ஆரம்பமாகி
இடம்பெற்றது.இப்போட்டியில் 73 ஆண்களும் 227 பெண்களுமாக மொத்தம் 300 ஆசிரியர்கள பங்கேற்று நிறைவு செய்தனர். ஆண் ஆசிரியர்கள் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் இருந்து புறப்பட்டு இராவீதியூடாக நல்லூரை அடைந்து பருத்தித்துறை வீதியூடாக மீண்டும் கலாசாலையை அடைந்தனர். இந்த வகையில் 8 கிலோ மீற்றர் தூரத்தை அவர்கள் ஓடினர். பெண் ஆசிரியர்கள் இராச வீதியூடாக ஆடியபாதம் வீதியை அடைந்து அங்கிருந்து கல்வியங்காட்டுச் சந்தியை அடைந்து பருத்தித்துறை வீதியூடாக மீளவும் கலாசாலையை அடைந்தனர். இவர்கள் 4.5 கிலோ மீற்றர் தூரம் ஓடியிருந்தனர்.
.

73 ஆண் ஆசிரிய பயிலுநர்கள் பங்கேற்ற இவ்வீதியோட்டத்தில் இ.ஜெனிஸ்ரன் முதலிடத்தையும் எம். சந்திரகுமார் இரண்டாம் இடத்தையும் எஸ். சத்தீஸ்வரன் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். 227 பெண் ஆசிரிய பயிலுநர்கள் பங்கேற்ற வீதியோட்டத்தில் இ.யமினா முதலிடத்தையும் பு.இன்பரூபி இரண்டாம் இடத்தையும் ச.துஷந்தினி மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
.
உடற்கல்வித்துறை விரிவுரையாளர் பா.வாசுதேவன் தலைமையில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு இடம்பெற்றது. பரிசில்களை கலாசாலை அதிபர் வீ.கருணலிங்கம், பிரதி அதிபர் ச.லலீசன், உபஅதிபர் த.கோபாலகிருஷ்ணன், துணை அதிபர் இ.சிவசக்தி, விரிவுரையாளர் குழுமத் தலைவர் வி.எஸ்.குணசீலன், தமிழர் ஆசிரியர் சங்கச் செயலாளர் சரா.புவனேஸ்வரன், முன்னாள் அதிபர் வே.கா. கணபதிப்பிள்ளை, நிகழ்வின் அனுசரணையாளரான கிருபா லேணர்ஸ் நிறுவன உரிமையாளர் அ.கிருபாகரன் ஆகியோர் வழங்கிக் கௌரவித்தனர்.

ad

ad