புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2015

தொடரும் பவானி சிங் குறித்த சர்ச்சை: இரண்டவாது முறையாக நீதிபதிகள் மாற்றம்



சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில், அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் தொடர தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை 2-வது முறையாக வேறொரு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எச்.வகேலா தலைமையிலான அமர்வு முன்பாக இன்று இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றபோது இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே இதே போன்ற ஒரு வழக்கில், இந்த அமர்வு பவானி சிங்கிற்கு எதிராக முன்பு தீர்ப்பு வெளியிட்டு இருந்தது என்றும், அதை எதிர்த்து பவானி சிங், உச்சநீதிமன்றத்தில் அதற்கு தடை பெற்று வந்ததாகவும் வழக்கறிஞர் தாமஸ் செபஸ்டியன் சுட்டிக்காட்டினார்.
இந்த பின்னணியில் தலைமை நீதிபதி டி.எச்.வகேலா தலைமையிலான அமர்வு இந்த மனுவை விசாரிக்க கூடாது என்று கோருவதாகவும் அவர் வாதிட்டார்.
பவானி சிங் தரப்பின் வாதத்தை ஏற்றுக்கொண்ட கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இந்த வழக்கு மீதான விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.
திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தரப்பில் தாக்கல் செய்யப்படும் இதே மாதிரியான கோரிக்கையை கொண்ட மனு, சென்ற வாரம், மூன்றாவது முறையாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சென்றவாரத்தில் இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் கே.எல்.மஞ்சுநாத் மற்றும் எஸ்.சுஜாதா ஆகியோரை உள்ளடக்கிய அமர்வு முன்பாக நடைபெற்றது.
அப்போதும் இந்த வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டது. தற்போது இந்த வழக்கு இரண்டாவது முறையாக வேறொரு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதே சமயம் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு மீதான விசாரணையின் 20 ஆவது நாளான இன்றும் வாதங்கள் நடைபெற்றது.
ஏற்கனவே ஜெயலலிதா தரப்பு வாதங்கள் முடிவு பெற்றுள்ள நிலையில், இன்று ஐந்தாவது நாளாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் பசந்த்குமார் வாதிட்டார்.
இது முடிவு பெற்ற பிறகு சுதாகரன் மற்றும் இளவரசி தரப்பிலான வாதங்கள் நடைபெறும். அதன்பின்னர் வழக்கு தொடர்புடைய நிறுவனங்கள் தரப்பிலான வாதங்கள் தொடங்கப்படும்.
இதற்கு பிறகு அரசு தரப்பு வழக்கறிஞர் தனது வாதங்களை துவக்க வேண்டும். இந்த சூழலில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பவானி சிங் தொடரலாமா கூடாதா என்பது குறித்த சர்ச்சை தொடர்ந்தும் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad