புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 பிப்., 2015

பன்னீர்செல்வம் அ ஜெயலலிதா பற்றி புகழ் மாலை சூட்டி கவிதை

  தமிழ் நாடு சட்டமன்றத்தில் ஆளுநரின் உரைக்கு நன்றி
தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு, முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அளித்த பதிலுரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி புகழ்
மாலை சூட்டி கவிதை படித்தார்.

அந்தக் கவிதையின் முக்கிய அம்சங்கள் வருமாறு...

" ஆறாம் முறை

கழகத்தை ஆட்சித்

தேர்தனில் அமர்த்தி,

சூதுமதி,

சூழ்ச்சிதனை

சுக்குநூறாய் நொறுக்கி,

தருமமே வெல்லும்,

பீனிக்ஸ் பறவையாய்

பிறப்பெடுக்கக்

காத்திருக்கும் எங்கள்

பேரறிவுத் தாயே !...

விழிப்புற்ற

தமிழகத்திற்கு

விடையாக வந்த

விடிவெள்ளியே !...


தங்கம் தருகிற கை

எங்கள்

தங்கத் தாரகை என

தாய்க்குலம் போற்றுகிற

சக்தியின் வடிவே !

சேற்றிலே பாடுபட்டு

செந்நெல் விளைவிக்கிற

ஏற்றமிகு

விவசாயிகள் வாழ்விலே

மாற்றத்தை உருவாக்க

காவேரியை மீட்டு வந்த

கம்பீரமே !

முல்லை பெரியாறு காத்திட்ட

மூவேந்தர் ஓர் உருவே !.....

தடம் மாறிக் கிடந்த

தலைமுறைக்கு

சரியான வழிகாட்டி,

சாதிக்கும் திறம் கூட்டி,

மதி செழிக்க

மடிக்கணினி தந்த

மகராசியே !...

ஆற்றல்களின்

பிரம்மமே !....

என்று கவிதையில் குறிப்பிட்டார் பன்னீர் செல்வம்.

ad

ad