புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2015

மஹிந்தவின் சீசெல்ஸ் சொத்துக்கள் குறித்து விசேட விசாரணை


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, சீசெல்ஸ் தீவுகளில் தீவு ஒன்றை கொள்வனவு செய்துள்ளமை தொடர்பில் விசாரணை
நடத்தப்படவுள்ளது.
அத்துடன் அந்த நாட்டில் அவருக்கு வேறு சொத்துக்கள் இருக்கின்றதா என்பதை அறியவும் சீசெல்ஸ் அரசாங்கத்தின் உதவியோடு இலங்கை அரசாங்கம் விசேட விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் இது சம்பந்தமான விடுத்த வேண்டுகோளுக்கு சீசெல்ஸ் அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் ஜின் போல் எடம் சாமான பதிலை வழங்கியுள்ளார். இரண்டு நாடுகளும் கையெழுத்திட்டுள்ள வரி தவிர்ப்பு ஒப்பந்தத்திற்கு அமைய இந்த சொத்துக்கள் தொடர்பான தகவல்களை வெளியிட முடியும் எனவும் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சீசெல்ஸ் நாட்டில் இலங்கை செய்துள்ள அனைத்து முதலீடுகள் பற்றியும் வேண்டுகோள்களுக்கு அமைய உதவி வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கம் சீசெல்ஸ் நாட்டில் இலங்கை வங்கி ஒன்றின் கிளையை நிறுவியதுடன் இரண்டு நாடுகளுக்கும் இடையில் விமான சேவைகளை ஆரம்பித்தது.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி கடந்த வருடம் சீசெல்ஸ் நாட்டுக்கு விஜயம் செய்ததுடன் அங்கு இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஒன்றையும் திறந்து வைத்தார். சீசெல்ஸ் நாட்டில் சிறியளவில் இலங்கையர்கள் வசித்து வருகின்றனர்.

ad

ad