புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2015

ஊழல்களில் தொடர்புடையவர்களுக்கு நடப்பு அரசாங்கம் உரிய தண்டனை-மஹிந்த ராஜபக்ச பிரதான சந்தேகநபர் என்ற அடிப்படையில் அவர் சட்டத்துக்கு முன் நிறுத்தப்படவேண்டும்-சம்பிக்க ரணவக்க

இலங்கையில் இடம்பெற்ற பாரிய ஊழல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதான சந்தேகநபர் என்ற அடிப்படையில் அவர் சட்டத்துக்கு முன் நிறுத்தப்படவேண்டும் என்று அரசாங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். 
நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்தார்.
முன்னைய ஆட்சிக்காலத்தில் பாரிய ஊழல்களில் தொடர்புடையவர்களுக்கு நடப்பு அரசாங்கம் உரிய தண்டனைகளை பெற்றுக்கொடுக்கவேண்டும்.
மேல் மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரையில் உள்ளவர்கள் இந்த விடயத்தில் தண்டிக்கப்படவேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
சிலர், தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிக்கொள்வதற்காக நடப்பு அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்க முயற்சிக்கின்றார்கள்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை உள்ளதாக தெரிவித்து வெளியிடப்பட்ட ஆவண விடயத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.
இதேவேளை சகல ஊடகங்களையும் பயன்படுத்தி, 250 பில்லயின் ரூபா செலவு செய்தே 58 லட்சம் பேரின் வாக்குகளை கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச பெற்றுக்கொண்டார்.
மஹிந்த ராஜபக்ச தேர்தலுக்காக செலவிட்ட 250 பில்லியன் ரூபா பணத்தில் 90 வீதமானவை மக்களின் வரிப் பணமாகும்.
பொதுமக்களின் சொத்துக்களே அதிகளவில் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்பட்டது.
எஞ்சிய 10 வீதம் போதைப் பொருள் மற்றும் எதனோல் வியாபாரிகளினால் வழங்கப்பட்ட பணமாகும்.
எனவே கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடிகள் அனைத்திற்கும் பிரதான பொறுப்புதாரி மஹிந்த ராஜபக்சவே எனவும் அவரை தண்டிக்க வேண்டுமெனவும் சம்பிக்க ரணவக்கத் தெரிவித்துள்ளார்.

ad

ad