புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2015

பொதுத் தேர்தலின் பின்னரும் இலங்கையில் தேசிய அரசாங்கம்: ரணில்- மைத்திரி உடன்பாடு


எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்னரும் தேசிய அரசாங்கம் ஒன்றை நிறுவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் உடன்பட்டுள்ளனர்.
இந்த உடன்பாட்டின்படி தேர்தலின் பின்னர் இரண்டு வருடங்களுக்கு தேசிய அரசாங்கம் நிறுவப்படும்.
இந்தநிலையில் சில உடன்பாடுகளுக்கு இணங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும்  தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடவுள்ளன.
இதற்கிடையில் ஜனநாயகக் கட்சி மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகளும் பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிடுகின்ற போதும் பின்னர் தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவுள்ளன.
எனினும் ஜே.வி.பி தேசிய அரசாங்கத்தில் இணையாது என்று தெரியவந்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தேர்தல் பிரசாரங்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்கவுள்ள நிலையில் அமைச்சர் ராஜித சேனாரத்ன, கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்படவுள்ளார்.

ad

ad