புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 பிப்., 2015

கிழக்கு முதலமைச்சர் பதவி முஸ்லிம் காங்கிரசுக்கே -ஜானதிபதி முடிவு செய்தாரா கிழக்கு முதலமைச்சர் பதவியை தர ஜனாதிபதி தீர்மானித்தது ஏன்?


ஜனாதிபதி தனது அரசியல் கூட்டணி செய்து கொண்ட உடன்படிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற நம்பகத் தன்மையோடு முஸ்லிம் காங்கிரஸுக்கு கிழக்கில் முதலமைச்சர் பதவியை வழங்குவது என்ற முடிவை எடுத்திருக்கின்றார் எனக் குறிப்பிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்அமைச்சர் ஹக்கீம், அந்த ஆட்சியில் இணைந்து கொள்ளுமாறு தமிழர் கூட்டமைப்பு ஏனைய கட்சிகளுக்கும் அழைப்புவிடுக்க இருப்பதாகவும் கூறினார்.

சம்மாந்துறை வேர்கள் விழுதுகள் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் சம்மாந்துறைஅப்துல் மஜீட் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற எம்.வை.எம். மன்சூரின் 25ஆவது நினைவுதின நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய பொழுதே நகர அபிவிருத்தி நீர்முகாமைத்துவ நீர்விநியோக அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார்.
அங்கு உரையாற்றும் பொழுது அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,
தேர்தல் பகிஷ்கரிப்பு, தமிழர் விடுதலைப் போராட்டத்தில் அவர்கள் விட்ட மாபெரும் தவறுகளில் ஒன்று. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியினர், அப்போதைய கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் என்று மேடை மேடையாக முழங்கினார்கள். 

2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை புலிகளின் வற்புறுத்தலின் பேரில் தமிழர் தரப்பு பகிஷ்கரித்தமை தான் அந்தக் கொடுங்கோலாட்சிக்கு வழிகோலியது. 
இனியும் தேர்தல் பகிஷ்கரிப்பில் அவர்கள் ஈடுபடமாட்டார்கள் என்பது நிச்சயமாக இருந்தாலும், ஆரம்பகாலத்தில் இருந்தே அந்த விவகாரம் அவ்வப் போது பரிசீலிக்கப்பட்டது. அது அவர்களது போராட்டத்தின் விதம் விதமான பரிமாணங்களில் ஒன்றாக இருந்து வந்திருக்கின்றது.
இன்று தமிழ், முஸ்லிம் சமூகங்களின் அரசியல் ஒரு புதிய கட்டத்தை அடைந்திருக்கின்றது. ஆயுதக் குழுக்கள் இருந்த காலத்தில் அச்சுறுத்தி அடிபணிய வைக்கின்ற பாங்கில் நடந்த சம்பவங்கள் மற்றும் அவற்றினால் விளைந்த விபரீதங்கள் என்பன எவ்வாறிருந்த போதிலும், இன்று பரஸ்பரம் விட்டுக்கொடுப்போடு இலங்கை என்ற தேசியத்துக்குள் தமிழ்ப்பேசும் சமூகங்கள் உச்சக்கட்ட அதிகாரப் பகிர்வு அனுபவிப்பதற்கான தகுதி குறித்து போராடிக் கொண்டிருக்கின்றோம். 

கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் நியாயப்படுத்துகின்ற விடயங்களைப் பொறுத்தவரையில் ஆசன வித்தியாசங்களை வைத்து கிழக்குமாகாண சபை ஆட்சி என் றவிடயத்தில் ஒரு பெரிய கயிறிழுப்பு நடந்து கொண்டிருக்கின்றது. 
கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் எங்களுக்கு வித்தியாசமான மக்கள் ஆணை கிடைத்தது. அது சாதாரணமான மக்கள் ஆணையல்ல. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கிடைத்த மக்கள் ஆணையாகும். ஆனால், அந்தத் தேர்தலின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் வாக்களித்த மக்களின் விருப்பத்திற்கு மாற்றமாக நடந்துகொண்டு ஆளுங்கட்சியுடன் சேர்ந்து அதனை விரயஞ் செய்துவிட்டதாகவும் சோரம்போய் விட்டதாகவும் கூறப்பட்டது. 
இன்றும் கூட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர்அதற்காக எங்கள் மீது வசைபாடிக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால், அரசியலில் சில நியாயங்களை அவர்கள் புரிந்துகொள்ளல் வேண்டும். அன்று கிழக்கு மாகாணசபை விடயத்தில் அரசுடன் நாங்கள் ஒத்துப் போகாதிருந்தால் வடமாகாணசபைத் தேர்தலையே நடத்தியிருக்கமாட்டார்கள்.
இன்னும் சில மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில் இந்நாடு தெற்கில் வாழும் சிங்கள மக்கள் மத்தியில் இன, மத, கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் நல்லாட்சி நிறுவப்படுவதற்காக வரிந்து கட்டிக்கொண்டு புறப்பட்ட முற்போக்குச் சக்திகள் இனவாதம் என்ற பிற்போக்கு அரசியல் படு குழிக்குள் இழுத்துக்கொண்டு போய்த் தள்ளுகின்ற விதத்தில் நாம் வடகிழக்கு அரசியல் பற்றி சிந்திப்பது தவறாகும்.

அதேவேளையில் முஸ்லிம் காங்கிரஸுடைய உரிமையை வழங்க வேண்டிய கடப்பாட்டை புதிய ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு இருக்கிறார்.
கட்சியின் தலைவரை அதன் செயலாளர் தோற்கடித்திருக்கின்றார். செயலாளராக இருந்தவர் இப்போது தலைவராகி இருக்கின்றார்.
ஜனாதிபதியின் பார்வையில் யார் எந்தப் பதவியில் இருந்தார் அல்லது இருக்கின்றார் என்பது அவருக்கு முக்கியமல்ல. தனது அரசியல் கூட்டணி செய்து கொண்ட உடன்படிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற நம்பகத் தன்மையோடு முஸ்லிம் காங்கிரஸுக்கு கிழக்கில் முதலமைச்சர் பதவியை வழங்குவது என்ற முடிவை எடுத்திருக்கின்றார். அதற்காக அவருக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டு இருக்கின்றோம்.
வித்தியாசமான மக்கள் ஆணை கிடைத்திருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கியதேசியக் கட்சி என்பவற்றுக்கு வித்தியாசமான மக்கள் ஆணைகள் கிடைத்துள்ளன

ad

ad