புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2015

சென்னை பேருந்துகளில் வழித்தட எண்கள் மாற்றம்



 
பொதுமக்கள் நலன் கருதி சென்னையில் இயக்கப்படும் டவுன் பஸ்களில் முதல் கட்டமாக 15 வழித்தடங்களின் எண்கள் மாற்றப்பட்டு உள்ளது என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினார்கள். 

சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் பொதுமக்களின் போக்குவரத்து தேவையை முழுமையாக பூர்த்தி செய்வதற்காக 27 பணிமனைகள் மூலம் 806 வழித்தடங்களில் 3 ஆயிரத்து 521 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. 

இதன் மூலம் தினசரி 51 லட்சத்து 84 ஆயிரம் பயணிகள் பேருந்தில் பயணம் செய்கின்றனர். போக்குவரத்து கழகத்துக்கு தினசரி ரூ.3 கோடியே 34 லட்சம் வருவாய் கிடைத்து வருகிறது. குறிப்பிட்ட பகுதிக்கு பல்வேறு எண் கொண்ட பஸ்கள் செல்வதால் பொதுமக்களுக்கு எந்த வழித்தடத்துக்கு எந்த பஸ் செல்லும் என்பதில் குளறுபடி இருந்து வந்தது. 

இதனை போக்குவதற்காக தற்போது, பரீச்சார்த்தமான முறை யில் 15 வழித்தடங்களின் பஸ் எண்கள் முதல்கட்டமாக மாற்றப்பட்டுள்ளன. குறிப்பாக ஓ.எம்.ஆர். பகுதிக்கு 102, இ.சி.ஆர்.109 எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர் ஆகிய இடங்களில் இருந்து புறப்படும் பேருந்துகளின் எண்கள் 9 என்ற எண்ணில் தொடங்கும் விதத்தில் மாற்றப்பட்டுள்ளது. 

பிராட்வே- கேளம்பாக்கம் 21 ஹெச் எண் பேருந்து 102 ஆகவும், பிராட்வே- செம்மஞ்சேரி ஹெச் 21 எண் பேருந்து 102 சி ஆகவும், திருவான்மியூர்- கிழக்கு தாம்பரம் டி51 எண் பேருந்து 95 ஆகவும், ஆவடி - தாம்பரம் 70 எண் பேருந்து 77 ஆகவும் மாற்றப்பட்டுள்ளது. இதேபோல் பிராட்வே - அய்யப்பன்தாங்கல் 17 எம் என்ற எண் பேருந்து 26 ஆகவும், டி 51 எஸ். எண் பேருந்து எண் 95 சி ஆகவும் மாற்றப்பட்டுள்ளது. 

மாற்றப்பட்ட புதிய எண் மற்றும் பழைய எண் ஆகியவை பஸ்களின் முன்புறமும், பின்புறமும் உள்ள கண்ணாடிகளில் ஒட்டப்பட்டுள்ளது. இதுதவிர பஸ் நிறுத்தங்களிலும் பொதுமக்கள் நலன் கருதி எழுதி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் பஸ் நிறுத்தங்களில் ஒலிபெருக்கி மூலமும் அறிவிப்பு செய்யப்படுகிறது. 

குறிப்பாக கிழக்கு தாம்பரம், திருவான்மியூர், அடையாறு பகுதிகளில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற நடைமுறை வந்தால் குறிப்பிட்ட பஸ் எண்களை பொதுமக்கள் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். பொதுமக்களின் வரவேற்பை பொறுத்து ஒரு மாதங்களில் அனைத்து வழித்தட எண்களும் முறைப்படுத்தப்பட உள்ளது. 

ad

ad