புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2015

இந்திய மீனவர்களால் வடபுல மீனவர்களின் பல கோடி ரூபா பெறுமதியான வலைகள் அழிப்பு: சுகிர்தன் நடவடிக்கை (படங்கள் இணைப்பு)

SAMSUNG CAMERA PICTURES
வடகடல் பகுதிக்குள் இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை அத்துமீறி ரோளர் இழுவைமடித் தொழிலில் ஈடுபட்டடமையால் வடமாராட்சி மீனவர்களின் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான வலைகள் முற்றாக அழிக்கபட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தனிடம் முறையிட்டுள்ளனர்.
உடனடியாக பருத்தித்துறை முனைப்பகுதிக் கடற்கரைக்கு விஜயம் செய்த வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன், பாதிக்கப்பட்ட மீனவர்களுடன் கலந்துரையாடி மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புத்தொடர்பில் யாழ். இந்திய துணைத் தூதுவர் திரு. மூர்த்தியிடம் முறையிட்டுள்ளார்.
இம் முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட யாழ். இந்திய துணைத் தூதுவர் திரு. மூர்த்தி, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மைத்திரி தலைமையிலான புதிய அரசாங்கம் ஆட்சி அமைத்தன் பின்னர் இந்திய மீனவர்கள் வடகடல் பகுதிக்குள் தங்குதடையின்றி அத்துமீறி வடபுல மீனவர்களின் கடற்றொழில் உபகரணங்களைச் சேதப்படுத்தி வருகின்றனர்.
இதன் வெளிப்பாடாக இன்று அதிகாலை வடகடல் பிரதேசத்திற்குள் அத்துமீறிய இந்திய மீனவர்கள் இக்கடலில் தற்பொழுது காணப்படுகின்ற சங்கு,இறால்,அட்டை போன்ற வளங்களைச் சுரண்டும் நோக்குடன் ரோளர் இழுவை மடித்தொழில் முறையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் வடமாரட்சியில் மயிலிட்டி தொடக்கம் சுண்டிக்குளம் வரையிலான சுமார் 80 கிலோமீற்றர் கரையோரப் பிரதேசத்தில் வசிக்கின்ற மீனவர்களின் வலைகள் சேதமாக்கப்பட்டு வடமாரட்சி மீனவர்களுக்கு மட்டும் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான வலைகள் சேதமாக்கப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்கள் இன்று 6 கிலோமீற்றர் கடல் மயிலுக்குள் அத்து மீறியுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கினறனர். பாதிக்கப்பட்ட மீனவர்கள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தனிடம் முறையிட்டுள்ளனர்.
உடனடியாக பருத்தித்துறை முனைப்பகுதிக் கடற்கரைக்கு விஜயம் செய்த வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன், பாதிக்கப்பட்ட மீனவர்களுடன் கலந்துரையாடி மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புத்தொடர்பில் யாழ். இந்திய துணைத் தூதுவர் திரு. மூர்த்தியிடம் முறையிட்டுள்ளார்.
இம் முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட யாழ். இந்திய துணைத் தூதுவர் திரு. மூர்த்தி, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக வடக்குமாகண கடற்படைக் கட்டளைத் தளபதிக்கும் அறிவித்துள்ளனர்.
 SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

ad

ad