புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 பிப்., 2015

கிழக்கில் தேசிய அரசு குறித்த மு.காவின் அழைப்புக்கு திருமலையில் இறுதி முடிவு! சம்பந்தன


"கிழக்கு மாகாண சபையில் தேசிய அரசு அமைக்க வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்த அழைப்புத் தொடர்பில் பரிசீலித்து வருகின்றோம். இது தொடர்பில் கூட்டமைப்பின் இறுதி முடிவை திருகோணமலையில் விசேட ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தி அறிவிப்போம்."
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து ஆட்சிமைக்கும் என்ற நம்பிக்கையில் தமிழ், முஸ்லிம் மக்கள் இருந்தவேளையில் மு.காவின் தலைமை மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கைகோத்து ஆட்சியமைத்தது.
அந்தவகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான ஹாபீஸ் நஸீர் அஹமட் பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் கிழக்கு மாகாண முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். மு.காவின் இந்தச் தன்னிச்சையான முடிவை இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வன்மையாகக் கண்டித்திருந்தனர்.
"தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை மதிக்காமல் - அவர்களின் ஒற்றுமையைப் பற்றி சிறிதளவும் சிந்திக்காமல் ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் வழங்கிய ஆணையைத் தூக்கியெறிந்துவிட்டு பதவிக்காகவும், சுகபோகங்களுக்காகவும் மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது" என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எம்.பி. கடுமையாகச் சாடியிருந்தார்.
இந்நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில், மத்தியைப்போன்று கிழக்கு மாகாணசபையிலும் தேசிய அரசை அமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி என்பன முன்வரவேண்டும் என்று மு.கா. தலைவரும் அமைச்சருமான ஹக்கீம் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த அழைப்பையடுத்து கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி., கிழக்கு மாகாண சபையின் கூட்டமைப்பு உறுப்பினர்களை கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
தேசிய அரசுக்கான அழைப்பை சாதகமாகப் பயன்படுத்தவேண்டும் என்று இந்தச் சந்திப்பில் முடிவெடுக்கப்பட்டது எனத் தெரியவந்தது. இதன் பின்னர் மு.கா. உயர்மட்டக் குழுவுக்கும் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவுக்கும் இடையில் பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன எனத் தகவல் கிடைத்தது.
கிழக்கில் தேசிய அரசு அமையும்போது ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தவிசாளர் பதவியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உப தவிசாளர் பதவியுடன் 2 அமைச்சுகளும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஓர் அமைச்சும், முதலமைச்சர் பதவியைக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ஓர் அமைச்சும் வழங்கப்படும் என்று கூட்டமைப்புடனான சந்திப்பில் மு.காவினர் தெரிவித்தனர் என்றும் அந்தத் தகவல் மேலும் தெரிவித்தது.
இந்நிலையில், கிழக்கில் தேசிய அரசு அமைக்க கூட்டமைப்புக்கு மு.கா. விடுத்த அழைப்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று அதன் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பியிடம் வினவியபோது அவர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
"கிழக்கு மாகாண சபையில் தேசிய அரசு அமைக்க வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்த அழைப்புத் தொடர்பில் பரிசீலித்து வருகின்றோம். கிழக்கில் தேசிய அரசு அமைப்பது தொடர்பில் மு.காவின் உயர்மட்டக் குழுவுக்கும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களை உள்ளடக்கிய கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவுக்கும் இடையில் பேச்சுகளும் இடம்பெற்று வருகின்றன. இந்தப் பேச்சுகளின் பின்னர் கிழக்கில் மு.கா. அமைக்கவுள்ள தேசிய அரசில் பங்கேற்பதா, இல்லையா என்பது தொடர்பில் இறுதி முடிவெடுப்போம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இறுதி முடிவை திருகோணமலையில் விசேட ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தி அறிவிப்போம்"  என்றார். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து ஆட்சிமைக்கும் என்ற நம்பிக்கையில் தமிழ், முஸ்லிம் மக்கள் இருந்தவேளையில் மு.காவின் தலைமை மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கைகோத்து ஆட்சியமைத்தது. அந்தவகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான ஹாபீஸ் நஸீர் அஹமட் பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் கிழக்கு மாகாண முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.

ad

ad