புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2015

கிழக்கு மாகாண சபையின் வரவு-செலவுத்திட்டம் நிறைவேற்றம் கூட்டமைப்பும் ஆதரவு


 இழுபறியில் இருந்த கிழக்கு மாகாண சபையின் வரவு-செலவுத்திட்டம் சகல கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. 


கிழக்கு மாகாண சபையின் அமர்வு இன்று காலை 10 மணிக்கு தவிசாளர் ஆரியபதி கலபதி தலைமையில் சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது.
 
இந்த சபை அமர்வில் புதிய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் மற்றும் புதிய உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா ஆகியோரை வரவேற்று 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.
 
 கிழக்கு மாகாண சபையின் 37 உறுப்பினர்களில்  வரவு-செலவுத்திட்டத்துக்கு 34 பேர் ஆதரவாக வாக்களித்ததுடன் ஏனைய இரண்டு உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளிக்கவில்லை.

ad

ad