புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2015


ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் 
அதிமுக வேட்பாளர் வளர்மதி வெற்றி 


ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில்   அதிமுக வேட்பாளர் வளர்மதி வெற்றி பெற்றார்.   இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆனந்த்தை விட 96 ஆயிரத்து 417   வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டதால், அவர் போட்டியிட்டு வென்ற ஸ்ரீரங்கம் தொகுதி காலியானது.  தமிழகத்தில் காலியாக இருந்த ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு கடந்த 13ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது.  மொத்தம் 2,70,281 வாக் காளர்களைக் கொண்ட இத்தொகுதியில் 2,21,172 வாக்குகள் பதிவானது. இது 81.83 சதவீதமாகும்.

வாக்குப்பதிவுக்கு பயன் படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், ஓட்டு எண்ணிக்கை மையமான திருச்சி  மதுரை நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சப்பூர் சாரநாதன் கல்லூரியில் 4 அடுக்கு  பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. எந்திரங்கள் வைக்கப்பட்ட அறை அருகில் மற்றொரு அறையில் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இரண்டு வரிசையாக தலா 7 மேஜைகள் அமைத்து மொத்தம் 14 மேஜைகளில் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டது. வாக்கு எண்ணும் பணியில் 42 பேர் ஈடுபட்டனர்.

காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. 23 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.  23-வது இறுதி சுற்று வாக்கு எண்ணிக்கையில், அதிமுக  வேட்பாளர் வளர்மதி திமுக வேட்பாளர் ஆனந்தை விட 96 ஆயிரத்து 417 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ad

ad