புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2015

ரத்தெலிகொட வெளிநாடு செல்லத் தடை.மொஹான் பீரிஸின் கடவுச்சீட்டை முடக்கக் கோரி மனு


முன்னாள் பிரதம நீதியசர் மொஹான் பீரிஸின் கடவுச்சீட்டை முடக்குமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுங்க அதிகாரியான டி ஆர் ரட்ணசிறி மற்றும் சட்டத்தரணி நாகாநந்த கொடிதுவக்கு ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டை கோடிட்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மனு எதிர்வரும் 6ஆம் திகதியன்று விசாரணைக்கு வரவுள்ளது.
கொழும்பு டொக்கியாட் நிறுவனத்துக்கு எதிரான வழக்கை மறைத்து அரசாங்கத்துக்கு கிடைக்க வேண்டிய 619 மில்லியன் ரூபாய்கள் நட்ட மேற்படுத்தியதாக மொஹான் பீரிஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.சுதர்மன் 

சுயாதீன தொலைக்காட்சியின் முன்னாள் நடப்பு செய்தி மற்றும் விவகார பணிப்பாளர் சுதர்மன் ரத்தெலிகொட வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுதர்மன் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தற்காலிக அடிப்படையில் இந்த தடை உத்தரவினை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் போது சிறுபிள்ளை ஒன்றை பயன்படுத்தி போலியான செய்தி ஒன்றை வெளியிட்டதாக சுதர்மன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான வழக்கு இன்றைய தினம் நீதிமன்றம் விசாரணை செய்யப்பட்ட போது, தற்காலிக அடிப்படையில் சுதர்மன் வெளிநாட்டுப் பயணங்களை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதிமன்றில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சுயாதீன தொலைக்காட்சியின் செய்தி பணிப்பாளராக கடமையாற்றிய காலத்தில், ஐக்கிய தேசியக்கட்சி, ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற அப்போதைய எதிர்க்கட்சியினரை கடுமையான விமர்சனம் செய்ததடன் பல்வேறு பிழையான தகவல்களை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சார்பில் வெளியிட்டதாக எதிர்க்கட்சிகள் சுதர்மன் மீது குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad