புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 பிப்., 2015

பௌத்த பிக்குகள் அனுபவிக்கும் சுகபோகங்கள்: சுட்டிக்காட்டிய சிங்கள நாளிதழ்

ஊருக்கு உபதேசம் செய்யும் பௌத்த பிக்குகள் தமது வாழ்வில் அவற்றை கடைப்பிடிப்பதில்லை என சிங்கள நாளிதழ் ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது.
பௌத்தபிக்குகள் அனுபவிக்கும் சுகபோகங்களை பாருங்கள் என குறித்த பத்திரிகை நேற்று முன்தினம் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
சுவர்ணவாஹினி சொர்ணமஹால் நிறுவனத்தின் 40 வருட நிகழ்வில் திரைப்பட தயாரிப்பாளர் சோமா எதிரிசிங்கவினால் 150 பௌத்த பிக்குகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்டதாக குறித்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
பன்றி இறைச்சி, கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, நண்டு, இறால், மற்றும் மதுபானம் உள்ளிட்டவற்றுடன் குறித்த பிக்குகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மலர்களினால் வடிவமைக்கப்பட்ட தோரணம், இளம் பெண்கள் உணவு பரிமாறல், உள்ளிட்ட புகைப்படங்களும், சோம எதிரிசிங்கவின் தங்க முலாம் பூசப்பட்ட புத்தர் சிலை அன்பளிப்புகள் ஆகிய புகைப்படங்களும் அந்த நாளிதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
மாட்டிறைச்சியை தடை செய்ய வேண்டும் என தெரிவித்து பௌத்த பிக்கு ஒருவரே தற்கொலை செய்து கொண்டார்.
ஆனால் அவர்களுக்கு பலதரப்பட்ட இறைச்சி வகைகளுடன் அன்னதானம் வழங்கப்படுகின்றது.
ஊருக்கு உபதேசம் செய்யும் பௌத்த பிக்குகள் தமது அன்றாட வாழ்வில் அவற்றை கடைபிடிக்க மறுக்கின்றனர்.

ad

ad