புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2015

புதிய அரசாங்கம், தமிழ் மக்களை ஏமாற்றுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.கிருஸ்ணபிள்ளை மா.உ

 
:
2005ம் ஆண்டு மஹிந்தவை ஜனாதிபதியாக்கியதும் எமது தமிழ் மக்களே, தற்போது மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆட்சிக்கு அமர்த்தியதும், தற்போதைய பிரதமரையும் அமைச்சரவையையும் ஏற்படுத்தியதும் தமிழர்களே.
ஆனால் இன்று அவர்களால் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்றோர்களோ என்ற சந்தேகம் எழுகின்றது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமைல) தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை அவர்களின் மாகாணசபை வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் பட்டிருப்பு தொகுதி பிரதேசங்களுக்கு எவ்வாறான உதவியினை வழங்கலாம் என்பது தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடுவதும் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மாற்றத்திற்காக வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவும் மக்கள் சந்திப்பு நிகழ்வு நேற்று சனிக்கிழமை பிற்பகல் களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
நான் சூடு, சுரணை, ரோசம், மானம், தன்மானம் மிக்க ஒரு தமிழன். தமிழன் தமிழனாக தன்மானத் தமிழனாக வாழ வேண்டும் என்பதற்காக போராடிக்கொண்டிருக்கின்றேன். ஒரு சிலர் நினைப்பது போன்று மாற்றான் காலடியில் மண்டியிடுவதற்குரியவன் நான் அல்ல.
எமது தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் தமிழ் மக்களுக்காக ஆயுதம் ஏந்திப் போராடியவன் அது மட்டுமல்லாது 20 வருடங்களுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்தவன், அத்தோடு பல தடவைகள் உயிராபத்தில் இருந்தும் தப்பியிருக்கின்றேன். அவ்வாறு கஷ்டங்களை அனுபவித்தது மட்டுமல்லாமல் தந்தை பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது தனையன் ஆயுதம் ஏந்தி விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெருமை எனக்கு மட்டுமே உரித்தானது. இவ்வாறு பல சோதனை வேதனைகளுக்கு மத்தியில் நாம் எமது மக்களுக்காக எமது இனத்திறகாக போராடும் போது மாகாணசபை விவகாரத்தில் சிலரின் எண்ணங்கள் இங்கு நிறைவேறாது என்னை வெளியேற்றினால் தான் அவர்களின் காரியம் ஈடேறும் என்பதால் நான் வெளியேற்றப்பட்டேன்.
நாம் கடந்த காலங்களில் விட்ட தொட்ட தவறுகளை மேலும் தொடரக் கூடாது. மாறி மாறி வந்த அரசாங்கங்கள் பல துன்பங்களை நடாத்தியிருக்கின்றன. அப்படி இருந்தும் நாம் சளைக்கவில்லை. கல்வியில் முன்னேறிய இனமாக இருந்தோம். ஆனால் தற்போது எம்மை விட ஏனைய இனத்தவர்கள் அனைத்து விதத்திலும் முன்னேறிக் கொண்டிருக்கின்றார்கள். நாம் பின்நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றோம். எமது கலாச்சாரம், பண்பாடு கல்வி, போன்றவற்றை வளர்ப்தற்கு எமது கிராமங்களின் தலைவர்கள் பிரதிநிதிகள் முக்கியஸ்தர்கள் அனைவருடனும் கலந்துரையாடி முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நாம் கப்பல் ஓட்டிய தமிழர்கள், ஆதி அந்தம் இல்லாதவர்கள், கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் தோன்றியவர்கள் என்றெல்லாம் வீர வசனம் பேசிப்பேசியே ஏனையவர்களை விட நாம் பின்நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். பேச்சுக்கு ஏற்றால் போல் செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.
நமது இனம் தீண்டாமை என்ற செயற்பாட்டினால் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக ஆதி அந்தம் இல்லாத எமது இனமும் கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் தோன்றிய எமது சமயமும் குந்தி இருப்பதற்கு ஒரு நாடு இல்லாமல் அல்லாடிக் கொண்டிருக்கின்றோம். இவற்றிற்கு காரணம் என்ன எமது மதகுருமாறும் அரசியல் பிரமுகர்களும் என வழிகாட்ட வேண்டியவர்கள் வழிகாட்டத் தவறியமையினாலேயே கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனா வரலாறு எமக்கு ஏற்பட்டுள்ளது.
எமது இனத்தினை பாதுகாப்பதற்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளை கிராமம் தோறும் மேற்கொள்ள வேண்டும்.
இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 வருடங்களுக்கு மன்னர் 65 வீதமாக இருந்த நாம் இப்போது 40 வீதமாக இருக்கின்றோம். மனமாற்றம், மதமாற்றம் என்ற ரீதியில் நாம் பிரிக்கப்பட்டு விட்டோம். ஆத்துடன் சாதிவெறி மதவெறி என்வற்றால் நாம் பின்னடைந்து இருக்கின்றோம்.
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் நடப்பவையெல்லாம் நல்லவையாக நடந்தவற்றை மறந்து செயற்பட வேண்டும். சாதி, மத பேதங்களை களைய வேண்டும். ஏழை பணக்காரன் என்ற பிரிவினையை நீக்க வேண்டும். மத மாற்றத்தினைத் தடுக்க வேண்டும். எமது சமுகத்தில் இறக்கும் போதும் பிறக்கும் போதும் மாத்திரமே சாதி பார்ப்பது குறைவாக இருக்கின்றது ஆனால் வாழும் காலங்கள் எல்லாம் சாதி என்ற வெறி பிடித்து உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி, ஏழை பணக்காரன், என்று பலவாறாக பிரிந்து நின்கின்றோம். உலகத்தில் உள்ள அனைத்தும் மதங்களும் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்றே கூறுகின்றது எனவே ஒவ்வொருவரும் உணர்ந்து இந்த நிலைமையை மாற்றத்திற்கு கொண்டு வரவேண்டும்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்புகளை மறப்போம் மன்னிப்போம். எதிர்காலத்தில் எமது இனம் வாழ வளம்பெற செய்ய வேண்டும். எமது இனத்தில் ஒரு சீர்திருத்தத்ததைக் கொண்டு வர வேண்டும். எமது சமுதாயம் சீதனக் கொடுமையால் சீரழிந்து செல்கின்றது. மனித நேயம் குறைந்து விட்டது. சீதனம் என்ற பெயரில் ஒவ்வொரு தொழில் ரீதியாக ஒவ்வொருவரும் விற்கப்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.
தற்போதைய நிலையில் எமது வாக்குரிமைதான் எமக்கு இருக்கும் ஒரே சொத்து. மது கஞ்சா போன்ற இதர விடயங்களுக்காக நாம் எமது வாக்குகளை விற்கக் கூடாது. எமது மக்களை நேசிப்பவர்கள் யார் யார் என அறிந்து நாம் ஆதரிக்க வேண்டும்.
கடந்த காலங்களில் எமது தமிழ் அரசியல்வாதிகள் விட்ட தவறினாலேயே எமது மக்கள் அவ்வாறு இருந்தனர் ஆனால் தற்போது அந்த நிலை மாற்றம் பெற்றுக் கொண்டு வருகின்றனர். மக்கள் மனங்களில் மாற்றம் தோன்றியுள்ளது.
தற்போது நடப்பவை என்னவென்றே தெரியவில்லை. இந்த ஆட்சி மாற்றத்தினைக் கொண்டு வந்ததவர்கள் வடக்கு கிழக்கு தமிழ் மக்களைத் தவிர வேறு எவரும் இல்லை. எமது கிழக்கு மாகாணசபையில் 11 தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இருந்தும் எமது மாற்றத்தினால் வந்த ஜனாதிபதியிடமும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிடமும் கிழக்கு மாகாணசபை விவகாரம் தொடர்பில் பல தடைவைகள் நாம் பேசியும் பாராமுகமாக்கப்பட்டுள்ளோம்.
2005ம் ஆண்டு மஹிந்தவை ஜனாதிபதியாக்கியதும் எமது தமிழ் மக்களே தற்போது மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆட்சிக்கு அமர்த்தியதும், தற்போதைய பிரதமரையும் அமைச்சரவையையும் ஏற்படுத்தியதும் தமிழர்களே. ஆனால் இன்று அவர்களால் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்றோர்களோ என்ற சந்தேகம் எழுகின்றது. இந்நிலையில் இவ்வாறன நிலை தொடர்ந்தால் இவர்களும் தமிழ் மக்களால் ஏமாற்றப்பட்டு புறக்கணிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

ad

ad