புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2015

கொழும்பில் அதியுச்ச பாதுகாப்பு வலய கட்டடங்கள் மீளக் கையளிப்பு

அதியுச்ச பாதுகாப்பு வலயங்கள் என்கிற போர்வையில் கடந்த அரச காலத்தில் பாதுகாப்புப் பிரிவின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த சகல தனியார் கட்டடங்களையும் உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொழும்பு ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகைகளுக்கு அருகாமையில்  அமைந்துள்ள கட்டடங்களே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், பாதுகாப்பு அமைச்சர் என்கிற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரமும் கிட்டியுள்ளது.
இந்நிலையில், மேற்படி ஜனாதிபதி மாளிகைகளுக்கு அருகாமையில் இருந்து மூடப்பட்ட அரச மற்றும் தனியார் வங்கிகளின் கட்டடங்களும்கூட விடுவிக்கப்படவுள்ளன.
அதியுச்ச பாதுகாப்பு வலயம் என்கிற போர்வையில், தசாப்த காலமாக மூடப்பட்டிருந்த கொழும்பு, கோட்டையின் ஜனாதிபதி மாவத்தை, பாரன் ஜெயதிலக மாவத்தை, டாம் வீதி என்பனவும் அண்மையில் பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்து விடப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது

ad

ad