புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2015

மைத்திரி, சந்திரிக்கா, மஹிந்த அரசியல் ரீதியாக இணைந்து செயற்படுமாறு கோரும் வகையில் மேல் மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன�� முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநயாக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோரை அரசியல் ரீதியாக இணைந்து செயற்படுமாறு கோரும் வகையில் மேல் மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
மேல் மாகாணசபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களினால் இந்த தீர்மானம் நிறைவேற்பற்பட உள்ளது.
முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில், ஸ்வாஸ்திபுரவில் அமைந்துள்ள மேல் மாகாணசபை முதலமைச்சர் காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதிகளும் இணைந்து செயற்பட வேண்டுமென அனைத்து மாகாணசபை உறுப்பினர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் எழுத்து மூலமான கோரிக்கை ஜனாதிபதியிடமும் முன்னாள் ஜனாதிபதிகளிடமும் முன்வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடிதத்தை அனுப்பி வைத்ததன் பின்னர் தனித்தனியாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
இந்தக் கோரிக்கை கடிதத்தை தயாரிக்கும் பொறுப்பு முதலமைச்சர் பிரசன்னவிடம் ஒப்படைக்கப்பட்டது.
கட்சி உறுப்பினர்கள் மற்றும் நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதியும் இணைந்து செயற்பட வேண்டுமென மேல் மாகாணசபை ஆளும் கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ad

ad