புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 பிப்., 2015

இரண்டு அமைச்சுப் பதவிகளையும் உப தவிசாளர் பதவியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளவுள்ளதுகிழக்கு மாகாண சபையில் மு.காங்கிரசுடன் இணைந்து செயற்பட கூட்டமைப்பு இணக்கம்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து கிழக்கு மாகாண சபை ஆட்சியில் பங்கேற்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளது.
இதன் அடிப்படையில் மாகாண சபையின் இரண்டு அமைச்சுப் பதவிகளையும் உப தவிசாளர் பதவியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளவுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.

எனினும் எந்தெந்த அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொள்வது என்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று மாகாண சபையில் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பின் குழுத்தலைவர் எஸ் தண்டாயுதபாணி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தலைவர் சம்பந்தனால் அமைக்கப்பட்ட ஐவரைக் கொண்ட குழு, கொழும்பில் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி இந்த இணக்கத்துக்கு வந்துள்ளதாக தண்டாயுதபாணி குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் மூன்றாவது கூட்டம் பெரும்பாலும் திருகோணமலையில் அதில் அமைச்சுக்கள் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பதவியை கொண்டு முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் ஒற்றுமையுடன் இணங்கிச் செல்வதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக தண்டாயுதபாணி கூறினார்.
கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் கொண்டிருக்கின்றன.

ad

ad