புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2015

யாழ்.நாவற்குழியில் டக்ளஸ் மற்றும் வீரவன்சவின் கூட்டு மோசடி அம்பலம்

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் சிங்கள மக்களை குடியேற்றுவதற்காக, தமிழ் மக்களுக்கு காணிகளை வழங்குவதாக காட்டிக் கொள்ள போலி காணி ஆவணங்களை வழங்கி முன்னாள் அமைச்சர்களான டக்ளஸ் மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் மோசடி புரிந்தமை அம்பலத்திற்கு வந்துள்ளது.
கடந்த வருடம் யாழ்.குருநகர் ஐந்து மாடி கட்டிடம் மீள் புனரமைப்பிற்குட்படுத்தப்பட்டு மக்களிடம் மீள கையளிக்கும் நிகழ்விற்கு விமல் வீரவன்ச வருகை தந்திருந்தார்.
இந்த நிலையில், நாவற்குழி பகுதியில் சிங்கள மக்களுக்கு அருகில் இருக்கும் தமிழ் மக்களுக்கும் காணி ஆவணங்களை, கையளிப்பதாக பெருமளவு மக்களை டக்ளஸ் தேவானந்தா அழைத்திருந்தார்.
எனினும் சுமார் 10 பேருக்கு மட்டுமே அந்த இடத்தில் வழங்கப்பட்டு மற்றைய மக்கள் ஏமாற்றி அனுப்பப்பட்டிருந்தனர்.
ஏனைய மக்களுக்கு பின்னர் காணி ஆவணங்கள் வழங்கப்படும் என கூறப்பட்டபோதிலும். அவை வழங்கப்படவில்லை.
இதேவேளை, காணி ஆவணங்கள் வழங்கப்பட்ட மக்களும் ஏமாற்றப்பட்டிருக்கும் விடயம் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.
அவர்களுக்கு வழங்கப்பட்ட காணி ஆவணங்களில் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ முத்திரை இடப்படாததுடன், தமிழ் மொழியில் பல எழுத்துப் பிழைகளுடன் வழங்கப்பட்டுள்ளது.
இதனை இன்றைய தினம் குறித்த நாவற்குழி மேற்கு பகுதிக்கு விஜயம் செய்திருந்த பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் மக்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
இதன்போது அதனை பிரதியமைச்சரும் ஒத்தக்கொண்டுள்ளதுடன், மாற்று ஆவணங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

ad

ad