புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 பிப்., 2015

பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவு



 உயர்தரப் பரீட்சையில் 3 ஏ பெற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவான யாழ்.மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி  மாணவர்கள் இருவருக்கு
பழைய மாணவன் ஜெயமோகனால் வழங்கப்பட்ட உயர்கல்வி ஊக்குவிப்புக் கொடுப்பனவான தலா 10 ஆயிரம் ரூபா நிதியினை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வழங்கிவைத்தார்.
 
கடந்த  ஆண்டில்  இடம்பெற்ற  உயர்தரப்  பரீட்சையில் சித்தி எய்திய   மாணவர்களுக்கான  கௌரவிப்பு  நிகழ்வு  இன்று
( 02.02.2015) காலை பாடசாலையில்  அதிபர், பழைய மாணவர்கள் சங்கத் தலைவர், செயலாளர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
 
குறித்த நிகழ்வுக்கு அதிதியாக கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்  ஈ.சரவணபவன் விஞ்ஞானப் பிரிவில் சித்தி எய்திய ர.தேனுசன் , கலைப்பிரிவில் சித்தி எய்திய சௌ. வினுஜா ஆகிய மாணவர்களுக்கு நினைவுச் சின்னத்தினையும் வழங்கி கௌரவித்து வைத்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ad

ad