புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 பிப்., 2015

தற்போதைய செய்தி ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கைது

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றப் புலனாய்வு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஜனாதிபதித் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக மஹிந்த ராஜபக்ஷ தரப்பிற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாக அவருக்கு சுகாதார அமைச்சர் பதவியும் கிடைக்கப்பெற்றிருந்தது. சுமார் இரண்டு வாரங்கள் வரை அவர் சுகாதார அமைச்சர் பதவியில் செயலாற்றியிருந்தார்.
இக்காலப்பகுதியில் அவர் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று இருப்பதாக திஸ்ஸ அத்தநாயக்க பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பத்துடன் அவ்வாறான ஒரு ஆவணம் ஒன்றையும் அவர் வெளிக்காட்டியிருந்தார்.
இந்நிலையில் குறித்த ஒப்பந்தம் போலியானது என்றும், அவ்வாறான ஒரு ஒப்பந்தம் நடக்கவில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சி விளக்கமளித்திருந்தது. அத்துடன் இது தொடர்பாக பொலிசிலும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிசார், தமது விசாரணைகளை தொடர்வதற்கு வசதியாக திஸ்ஸ அத்தநாயக்கவை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

ad

ad